01 அறிமுகம்
பூட்டிய இருப்புக் கதவு திறக்கப் பட்டது சிறுத்தையே வெளியில் வா…
–தமிழ்க்கவி பாரதிதாசன்
அகண்ட நிலத்தை சொந்தம் கொண்டாடி, பாடல் இயற்றி பலரும் இருந்த காலத்தில் , உலகமே பரந்துபட்ட தமிழுக்காக, தமிழருக்காக கவி இயற்றியவர் இத்தமிழ்க்கவி
சென்ற வருடம் இதே நாளில், செப்டம்பர் 30 2016 குளிர்பனி பொழிந்திடும் கொடைக்கானலில் ஏரிக்கரை ஓரம் அமர்ந்து யோசித்துக் கொண்டு இருந்தேன். பிழைப்பின் பொருட்டு நான் அப்போது அறிவிப்பாளராக இருந்த சமயம், ஏரிக்கரை ஓரம் அமர்ந்து பல இன்னிசைக் கவிதைகளை இயற்றிக் கொண்டு இருந்தேன்; பாரதிதாசரின் கவிகள் என்னும் நூல் வாசித்துக்கொண்டு இருந்தேன். அவரது கவிதைகள் என்னைக் கவர்ந்தன ஒருவரின் எழுத்து என்பது நம்மோடு ஒத்துப் போகும் சமயத்தில்தான்; நாமும் அந்தக் கவியும் ஒரு சேர்கின்றோம்.
நானும், தமிழ்க்கவியும்,
வானில் தவழ்ந்திடும் குளிர் மேகமும்,
ஏரிக்கரையில் எங்களோடு அமர்ந்து;
மலர் என்னும் கவி முடைந்து கொண்டிருக்கும் மரங்களும்,
தமிழ் இசையோடு கலந்திருந்த சமயம்,
தமிழ்ச்சுவை தந்து கொண்டிருக்கும் ஒரு பண்பலைக்கு,
இங்குதான் கவிகளை தமிழ்வாளாக பதம் தீட்டிக் கொண்டு இருந்தேன்.
வேலை
அடுத்து வந்து அக்டோபரில் சென்னை நோக்கி பயணம் ஆனேன்.
பிடித்த வேலை என்பது வேறு
பிழைப்பு வேலை என்பது வேறு.
பிழைப்பு வேலை பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டது,
பிடித்த வேலை என்பது
- ஆட்சியின் புகழ் பாடும்,
- ஆட்சியாளரின் புகழ் பாடும்;
என்பதன் அங்கம் கண்டேன் அங்கு.
மக்களின் பிரச்சனையை மக்களே அறிய விடக்கூடாது என்பதற்காக கங்கணம் கட்டி வேலை பார்க்கும் வேலையாள்களையும் கண்டேன்.
உலக அரசுகள் அனைத்துமே, இப்படித்தான் மக்களை இருட்டடிப்பில் வைத்திருக்க வேண்டி இருக்கிறது.
“இனங்களின் அழிப்பில்தான் அரசுகள் வாழ முடியும்!” என்பது ஒரு கசப்பான உலக உண்மை.
மக்களின் உணர்வுகளை பறித்துத்தான்;
ஆட்சியாளர்களால் தேசியம் என்பது கட்டமைக்கப்படுகிறது.
மக்களை அன்றாடத் தேவைக்காக இருக்கும் கலாச்சாரம் அழித்து,
நுகர்வுக் கலாசாரம் உருவாக்கி அதில் உண்கின்றனர்;
உலக அரசியல்வாதிகள்.
காகிதப் பணம் அச்சடித்து மக்களை -
அதற்காக; திரியவிடும் போது அரசு -
பணம் படத்து வெல்ல முடியும்
படிப்பு-வேலை;
சென்னை-அரசு;
பணம்-வெளிநாடு;
வரி-போக்குவரத்து;
மதுபோதை-மதுபோதை-மதுபோதை…
இவ்வாறெல்லாம் அரசு பணம் படைக்க முடியும்.
விவசாயம்- உற்பத்தி- உணவு- தன்னிறைவு
என்றால் தனிமனிதன் முன்னேற்றம் அடைவான்.
தனி மனித முன்னேற்றம்
அரசு அடிக்கும் காகிதப் பணத்தில் எழுதப்படாத போது;
மனிதன் சுதந்திரம் அடைகிறான்.
அரசியல்வாதிகள் சிறையில் அடைபடுகின்றனர்.
அப்போது ஆட்சியாளர்களின்
பணம் படைக்கும் இயந்திரம் உடைகிறது.
இந்த இயந்திரத்தை உடைக்க அனுமதிக்க கூடாது என்பதே ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருக்கிறது.