“சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..
https://thanithamizhakarathikalanjiyam.github.io/lexpser_new
- 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
- 2. பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
-
3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
-
4. “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.
- 4.1. “சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.
குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.
இந்தப் பணிகள்
- அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
- புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
- எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
- இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
- முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
- தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
- தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
- ஆங்கிலம் -> தமிழ் கட்டுரையாளர்களுக்கான அகராதி,
- பள்ளி , கல்லூரி மாணவர்கள் / ஆசிரியர்களுக்கான அகராதி,
- போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தமிழ் வழி கற்றழுகக்கான அகராதி.
- Collected from https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வரலாறு (Thanks to Wikipedia)
தமிழ் நாட்டில் கிருத்தவப் பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க சங்கத்தார் தமிழில் ஒரு விரிவான அகராதி யொன்றை வெளியிடவிரும்பினர். அவர்கள் சார்பாகப் பெர்சிவல் முதலிய அறிஞர் பலர் பலகாலமாகத் திரட்டிய அகராதியைப் பதிப்பிக்கும் பொறுப்பும் உரிமையும் வின்சுலோ என்னும் அறிஞருக்கு வாய்த்தது. அவ்வறிஞர், அறுபத்தேழாயிரம் சொற்கள் அடங்கிய, பேரகராதியை அச்சிட முற்பட்டார். அதன் செலவு, அளவு கடந்து சென்றதால் அமெரிக்க சங்கத்தார் அதன் பொறுப்பை ஏற்று நடத்த இயலாது தளர்வுற்றார். முந்நூற்று அறுபது பக்கம் அச்சிட்டு முடிந்த அளவில், அகராதி வேலை நின்றுவிடுமோ என்ற கவலை பிறந்தது. இதனால் வின்சுலோ சென்னை அரசாங்கத்தாரது உதவியை நாடினார். அன்னார் அகராதி முற்றுப் பெற்றவுடன், நூறு, பிரதிகள் விலை கொடுத்து வாங்குதல் கூடும் என்று வாக்களித்தனரேயன்றி முன்பணம் கொடுத்து உதவ முனவரவில்லை. அகராதி அச்சிட்டு முடிவதற்குப் பின்னும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று வின்சுலோ ஐயர் கணக்கிட்டார். ஆனால் இவர் கருதியவாறு பங்குகள் விலைப்படவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றித் தம் சொந்தப் பொறுப்பில் ஐயாயிரம் ரூபாய் கடன்பட்டு, அச்சு வேலையை முடித்து அகராதியை வெளியிட்டார்.
இந்நிலையில் வின்சுலோவின் அகராதியைப் மேலும் பெருக்கியும் புதுக்கியும் வெளியிடல் வேண்டும் என்ற கருத்து அறிவாளர் உள்ளத்தில் அரும்பிற்று. பல்லாண்டு தமிழ் நாட்டில் உழைத்துப் பழுத்த முதுமையுற்று, ஆங்கில நாட்டிற் போந்து தமிழ்ப்பணி செய்து கொண்டிருந்த [போப்பையர்] மனத்திலும் இவ்வார்வம் பிறந்தது. தமிழறிந்தவர் ஒருவரை உதவிக்கு அனுப்பினால் தாமே வின்சுலோவின் அகராதியைப் புதுக்கித் தருவதாக அவர் சென்னை அரசாங்கத்தாருக்கு அறிவித்தார். ஆயினும் அக் கருத்து நிறைவேறு முன்னமே போப்பையர் வாழ்வு முடிந்துவிட்டது. அவர் தொகுத்து வைத்திருத்த சொற்களையும் குறிப்புக்களையும் சென்னைக் கையெழுத்து நூல் நிலையத்திற்கு அவர் மைந்தர் அனுப்பினார்
அப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்த சாந்தலர் என்னும் ஆங்கில அறிஞர் இப்பேரகராதியை வெளியிடுவதற்கு ஒரு திட்டம் வகுத்துச் சென்னை அரசாங்கத்தார்க்கு அனுப்பினார். அவர்கள் அதனை ஆதரித்தார்கள். இந்திய நாட்டு அமைச்சர் அப்பணியின் அவசியத்தை உணர்ந்து நூறாயிரம் ரூபாய் செலவிட அனுமதியளித்தார். பேரகராதியின் பதிப்பாசிரியராகச் சாந்தலரே நியமிக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகள் அவர் வேலை பார்த்தார் ; எழுபதாம் வயதில் ஓய்வு பெற்றார்.
அரசாங்கத்தார் குறித்தவாறு ஐந்து ஆண்டுகளில் அகராதி முற்றுப் பெறவில்லை; அதன் செலவு நூறாயிரம் ரூபாய் அளவில் நிற்கவும் இல்லை. அந்நிலையில் அரசியலாளர் கருத்துக்கிணங்கி அகராதியின் பொறுப்பையும் உரிமையையும் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது. ஏறக்குறைய இருபத்தைந்து. ஆண்டுகளில் முற்றுப்பெற்ற பேரகராதி ஏழு பெருந்தொகுதியாகத் ‘தமிழ் லெக்சிக்கன்’ என்னும் பெயரோடு வெளியிடபட்டது.