தமிழ் நிறங்கள்
தமிழில் நிறங்கள் எவையெவை? இங்கு கீழே நான் அடுக்கியிருக்கும் நிறங்களுடன் சிபநீ (சிவப்பு-பச்சை-நீலம் சேர்வு) மதிப்பும் தெரிவித்துள்ளேன். இதில் சிவப்பு/பச்சை/நீலம் ஒவ்வொன்றும் 0 - 255 என்ற மதிப்பு வரையரையில் குறிப்பிட்டுள்ளென். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில நிற வகைகளை இங்கு அடுக்கியுள்ளேன். இவற்றுள் பல நிறங்களுக்கு வேறுபல சிபநீ மதிப்புகளும் இருக்கக்கூடும் என்றாலும் இங்கு கொடுக்கப்பட்ட சிபநீ மதிப்புக்கள் சராசரியான/கிட்டத்தட்டமான மதிப்புக்களே.
.
இங்கு கொடுக்கப்பட்டுள்ளவைகள் போக தமிழர்கள் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தும் வேறு நிறப்பெயர்கள் என்னென்ன? உங்கள் எண்ணங்களுக்கு எட்டிய நிறப்பெயர்களை இங்கு பகிர்ந்திடுமாறு வேண்டிக்கொள்கிறேன். அவற்றிற்கு சிபநீ மதிப்பும் தெரிந்தால் அளித்திடுங்கள்.
.
நிறமின்மை:-
கறுப்பு - கார் - கரி - கருமை (0, 0, 0) .
ஓர்நிறம்:-
- 1) கடற்படைநீலம் (0, 0, 127)
- 2) நீலம் (0, 0, 255)
- 3) பச்சை - பசுமை (0, 127, 0)
- 4) வெளிர்பச்சை (0, 255, 0)
- 5) அரக்கு (127, 0, 0)
- 6) சிவப்பு - செம்மை (255, 0, 0)
.
ஈர்நிறக்கலவை:-
- 1) இளமயில்நீலம் (0, 127, 127)
- 2) இளநீலம் (0, 127, 255)
- 3) வெளிர்பச்சை (0, 255, 127)
- 4) மயில்நீலம் (0, 255, 255)
- 5) அவுரி(வைலட்) (63, 0, 255)
- 6) செவ்வூதா - கத்தரிப்பூ(பர்பிள்) (127, 0, 127)
- 7) ஊதா (127, 0, 255)
- 8) வாடாமல்லி (200, 0, 200)
- 9) ரோசா (255, 0, 127)
- 10) செந்நீலம் (255, 0, 255)
- 11) கொக்கோ (123, 63, 0)
- 12) பழுப்பு (127, 63, 0)
- 13) இடலை(ஆலிவ்) (127, 127, 0)
- 14) கிளிப்பச்சை (127, 255, 0)
- 15) எலுமிச்சை (192, 255, 0)
- 16) செம்மஞ்சள் - இனிமிச்சை(ஆரஞ்சு) (255, 127, 0)
- 17) மா (255, 200, 0)
- 18) பொன் (255, 215, 0)
- 19) மஞ்சள் (255, 255, 0)
மூநிறக்கலவை:-
- 1) குங்குமப்பூ (103, 38, 6)
- 2) மூக்குப்பொடி (109, 88, 67)
- 3) காப்பிப்பொடி (111, 78, 55)
- 4) சிலேட் (112, 128, 144)
- 5) சாம்பல் (127, 127, 127)
- 6) குறிஞ்சி (173, 149, 223)
- 7) மருதாணி (175, 127, 41)
- 8) மரூண் (176, 48, 96)
- 9) வெண்சாம்பல் (190, 190, 190)
- 10) கடல்நீலம் (128, 255, 212)
- 11) வான்நீலம் (135, 206, 235)
- 12) செம்பு (184, 115, 51)
- 13) காக்கி (189, 183, 107)
- 14) கத்தரிநீலம் (204, 204, 255)
- 15) செம்மண் (205, 92, 92)
- 16) வெண்கலம் (205, 127, 50)
- 17) இலவங்கப்பட்டை (210, 105, 30)
- 18) சுட்டமண் (226, 114, 91)
- 19) குங்குமச்சிவப்பு (227, 66, 52)
- 20) இளவூதா(லாவென்டர்) (230, 230, 250)
- 21) வெளிர்காக்கி (240, 230, 140)
- 22) பனிநீலம் (240, 248, 255)
- 23) காவி (244, 196, 48)
- 24) கோதுமை (245, 222, 179)
- 25) தக்காளி (255, 99, 71)
- 26) பவழம் (255, 127, 80)
- 27) ஒண்ணிளஞ்சிவப்பு(பிங்க்) (255, 20, 147)
- 28) இளஞ்சிவப்பு(பிங்க்) (255, 192, 203)
- 29) தயிர்வெள்ளை (255, 253, 208)
- 30) பனிவெள்ளை (255, 250, 250)
- 31) தந்தவெள்ளை (255, 255, 240)
- 32) வெள்ளை - வெளுப்பு - வெண்மை (255, 255, 255)
பல நிறங்கள் கொண்ட பூக்களுக்கும் காய்கனிகளுக்கும் பட்டை மற்றும் வேர்களுக்கும் உண்டான தமிழ்பெயர்களையும் பயன்படுத்தலாம். இச்சிறப்பு நிறங்களுக்கான பெயர்கள் வேறு மொழிகளில் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. காட்டாக:
- 1) குறிஞ்சியூதா
- 2) எருக்கூதா
- 3) கருவிளையூதா
- 4) காந்தள்செம்மை
- 5) காயாநீலம்
- 6) நகலிங்கசிவப்பு
- 7) மருதச்சிவப்பு
- 8) பலாசம்செம்மஞ்சள்
- 9) சண்பகமஞ்சள்
நன்றி தாசெ.