“ஆட்சி சொற்கள் அகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..
https://thanithamizhakarathikalanjiyam.github.io/aaatchi_sorkal_akarathi
- 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
- 2. பின்னர் ஆட்சி சொற்கள் அகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
-
3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
-
4. “ஆட்சி சொற்கள் அகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.
- 4.1. “ஆட்சி சொற்கள் அகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.
குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.
இந்தப் பணிகள்
- அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
- புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
- எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
- இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
- முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
- தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
- தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.
ஆசிரியர் குறிப்பு
Thanks to https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf
Licence derived from WIKI-Projects under https://creativecommons.org/licenses/by-sa/3.0/
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
CC Zero badge.svg Blank.jpg CC-logo.svg Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
முன்னுரை
- தலைப்பு ஆட்சி சொற்கள் அகராதி
- ஆசிரியர் புலமை வேங்கடாசலம்
- ஆண்டு 2010
- மூலவடிவம் pdf
- மெய்ப்புநிலை Add an OCR text layer
பதிப்புரை
மேல நீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புலமை வேங்கடாசலம் அவர்கள் இந்தப் பயனுள்ள ஆட்சி சொற்கள் அகராதியைத் தயாரித்துள்ளார்.
அவர் தமது முன்னுரையில் கூறுகிறார்:
“தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சிமொழி; அதனால் தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் தமிழிலேயே கோப்புகள் எழுதியாக வேண்டும். எனினும், தமிழக அரசின் அலுவலகங்களில் சில இன்னமும் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தாது இருக்கிறது.”
வட நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அழகாகத் தமிழில் எழுதவும் பேசவும் செய்யும் போது நம்மவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் வருத்தப்படுகிறார்.
கேரளா, ஆந்திரா மாநில அரசு அலுவலகங்களில் அவர்களது மொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் பட்டப்படிப்புக்கு தாய்மொழியே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அத்தகைய கல்லூரிகள் அதிகம் இல்லை. ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள நினைப்பது சரியே. ஆனால் தமது மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித் துறையிலும் தமிழ்மொழியை பயன்படுத்துவது என்பதைக் கொள்கை அளவில் நீதிபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி சொற்கள்தான் கோப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த அகராதி தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு முடிவுகளும் தமிழில் அறிவிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் சாமான்ய மக்கள் அரசின் கொள்கைகள், முடிவுகள் மற்றும் அரசின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முடியும். அவர்களும் அரசுக்கு அனுப்பும் தங்கள் மனுக்களில் இச் சொற்களை பயன்படுத்த முடியும்.
நடைமுறைக்குத் தேவைப்படும் எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் பொருத்தமான தமிழ்ப் பதங்கள் இந்த அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதுபோல, இந்த நூல் அரசு அலுவலகங்களுக்கு மட்டுமல்லாது. அனைவருக்கும் பயன்படும்.
காலத்திற்கு ஏற்ற இந்த நூலை சிறப்பாகத் தயாரித்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர். இதை வெளியிட எமக்கு வாய்ப்பளித்ததற்கு அவருக்கு எமது உளமார்ந்த நன்றி.
- பதிப்பகத்தார்
முன்னுரை
தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சிமொழி: அதனால் தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் தமிழிலேயே கோப்புகளை எழுதியாக வேண்டும். எனினும் தமிழக அரசின் அலுவலகங்களில் சில இன்னமும் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தா திருக்கிறது. தமிழக அரசின் அலுவலக நடைமுறைகளுக்கு நன்கு பயன்படும் வகையில் ஆட்சிச் சொற்கள் அகராதி என்னும் இந்த அகராதியைத் திறம்படப் படைத்திருக்கிறேன்.
வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றும் சில ஐ.ஏ.எஸ்., ஐ. பி. எஸ் அதிகாரிகள் அழகாக தமிழில் எழுதவும் பேசவும் செய்யும்போது நம்மவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் செய்தால்தான் அறிவாளிகள் என்று மதிப்பார்கள் என்ற போலி மரியாதைக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசவும் எழுதவும் செய்கிறார்கள். இதிலெல்லாம் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் கூட ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள். இவர்கள் எப்படித் தமிழை வளர்க்க முடியும்?
இந்த நூல் அரசு அலுவலர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்கண் குறைகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் அதை எழுதி அனுப்ப வேண்டுகிறேன். அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும்.
இங்ஙனம்
புலமை வேங்கடாசலம்
23/15, பூக்கார இரண்டாம் தெரு,
தஞ்சாவூர்-613001
தொலைபேசி எண் :238554
செல் எண்:9362852769
ஆட்சி சொற்கள்
அகராதி
[ADMINISTRATIVE TERMS DICTIONARY]
சட்டத்தமிழ் அறிஞர்
புலமை வேங்கடாசலம், எம்.ஏ., பி.எல்.,