“சைவ சித்தாந்த அகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..
https://thanithamizhakarathikalanjiyam.github.io/saiva_sidhandha_agarathi
- 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
- 2. பின்னர் சைவ சித்தாந்த அகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
-
3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
-
4. “சைவ சித்தாந்த அகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.
- 4.1. “சைவ சித்தாந்த அகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.
குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.
இந்தப் பணிகள்
- அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்
- புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டும்
- எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
- இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை.
- முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
- தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
- தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிச்சைமுத்து மு.
ஆசிரியர் குறிப்பு
Thanks to https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf
Licence derived from WIKI-Projects under https://creativecommons.org/licenses/by-sa/3.0/
- தலைப்பு சைவ சித்தாந்த அகராதி
- ஆசிரியர் பேரா. அ. கி. மூர்த்தி
- பதிப்பகம் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்
- முகவரி சென்னை
- ஆண்டு முதல் பதிப்பு - 1998
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
CC Zero badge.svg Blank.jpg CC-logo.svg Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
முன்னுரை
- சைவசித்தாந்த அகராதி
- பேரா.அ.கி. மூர்த்தி
- திருநெல்வேலி, தென்னிந்திய
- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.
- 154, டி. டி. கே. சாலை, சென்னை - 600 018.
நூல் விவர அட்டவணை
- 1) நூலின் பெயர்:சைவசித்தாந்த அகராதி
- 2) பொருள் :சமய அகராதி
- 3) ஆசிரியர் பெயர் :அ.கி.மூர்த்தி
- 4) வெளியீட்டெண் :2011
- 5) பதிப்பாண்டு :முதல் பதிப்பு-1998
- 6) நூலகக் குறியீட்டெண்:R673K N98
- 7) பதிப்பாளர் : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18
- 8) உரிமை : ஆசிரியர்
- 9) மொழி : தமிழ்
- 10) நூலின் அளவு : டெம்மி
- 11) தாள் : 14.4 kg
- 12) கட்டமைப்பு : அட்டைக்கட்டு
- 13) அச்சு எழுத்து :10 pt.
- 14) மொத்தப் பக்கங்கள் :yi+247
- 15) விலை : ரூ. 65
- 16) அச்சிட்டோர் : அப்பர் அச்சகம், சென்னை-108
- 17) கணிப்பொறி அச்சு : ஈசுவர் லேசர், சென்னை-18
பதிப்புரை
அகராதித் துறை மேலை நாட்டில் பல வழிகளில் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அகராதி தொகுக்கப் பெற்றுள்ளது. தமிழில் இதுவரை பொதுவான அகராதிகளே வெளி வந்துள்ளன. இலக்கணச் சொல் அகராதி, மரபுத் தொடர் அகராதி போன்று சில வெளிவந்துள்ளன.
கணிப்பொறிக்குரிய சொற்களைத் தொகுத்து, கணிப்பொறி அகராதி, இன்டர்நெட் - மல்டிமீடியா சொற்களஞ்சியம் போன்றவற்றைக் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
தமிழர் தம் தத்துவமான சைவசித்தாந்தம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் தனித்துறையாகப் பயிலப்பெறுகின்றது. இதன் அடிப்படையாகப் பதினான்கு சாத்திர நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. இவை தவிர இவற்றுக் கெழுந்த சிவஞானபோத மாபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சித்தியார் அறுவர் உரை போன்ற பழைய உரைகள் போகப். பிற்காலத்தில் திருமுறை சாத்திர நூல்களுக்கெழுந்த பல உரைகள் இன்று வழக்கில் உள்ளன. இவற்றில் காணப்படும் கலைச் சொற்களைத் தொகுத்து இவற்றுக்கான விளக்கங்களைத் தொகுக்கும் முயற்சியே இந்த அகராதி தோன்றுவதற்குக் காரணம்.
இம் முயற்சியில் ஈடுபட்டு சிறப்பாக அகராதியைத் தொகுத்துள்ளவர் திரு. அ.கி.மூர்த்தி. எம்.ஏ. ஆவர். சமய, சாத்திர நூல்களில் ஆழமான பயிற்சியுடைய இவர் பல்வேறு நூல்களைப் படித்தறிந்து அரிய சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து உரிய விளக்கங்களை இணைத்து இதனை உருவாக்கியுள்ளார்.
சைவசித்தாந்தம் பயில்வார்க்கு இவ்வகராதி பெரிதும் பயன்படும். சாத்திர நூல்களில் வடமொழிச் சொற்கள் அதிக அளவில் விரவப் பெற்றுள்ளன. கழக் நூல்களில் வடமொழிச் சொற்களைக் களைந்து அவற்றுக்கீடான தமிழ்ச் சொற்களைப் iii
பெய்வது முறை. ஆனால் இவ்வகராதியில் சாத்திர நூல்களிலிருந்தும் உரை நூல்களிலிருந்தும் சொற்கள் தொகுக்கப் பெற்றதால் அவற்றில் பயின்று வரும் வடசொற்கள் அப்படியே எடுத்துக் கொடுக்கப்பெற்றுள்ளன. இனி எதிர்வரும் பதிப்புகளில் உரை விளக்கத்தில் வரும் வடசொற்களைக் களைய முயல்வோம்.
அன்பர்கள் இவ்வகராதியைப் பயன்படுத்தி விளக்கம் பெறுவார்களாக.
- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
முன்னுரை
சைவசித்தாந்தம் தலைசிறந்த தமிழ் மெய்யறிவு ஆகும். இம்மெய்யறிவு குறித்துத் தமிழில் முறையானதும் முழுதுமான அகராதி இல்லை. இக்குறையை நிறைவு செய்யவே இவ்வகராதி இப்பொழுது வெளியிடப்படுகிறது.
சைவசித்தாந்த நூல்கள் (மெய்கண்ட நூல்கள்) 14இல் தலைசிறந்தது சிவஞான போதமே. ஏனைய பதின்மூன்றும் அதன் அடி ஒற்றிச் செல்வனவே. இப்பதினான்கு நூல்களிலுள்ள இன்றியமையாச் சொற்கள் திரட்டப்பட்டு, அவை இவ்வகராதியில் விளக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விளக்கப்படுவது பின்வரும் நிலைகளில் அமைகின்றன. 1. அடிப்படைக் கருத்துகள். 2. கொள்கை விளக்கமும் கொள்கை மறுப்பும் 3. ஆசிரியர்கள் வரலாறு 4. நாயன்மார்கள் வரலாறு 5. திருவிழாக்கள் 6. இன்றியமையா இடஞ்சுட்டுக் குறிப்புகள் 7. இன்ன பிற அரிய குறிப்புகள். அகராதியின் தனிச்சிறப்பே எந்த ஒரு பதிவையும் நினைத்த அளவில் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பிருப்பதே. அவ்வகையில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பதிவுச் சொற்கள் அனைத்தும் எளிமையாகவும் எடுத்துக்காட்டுடனும் விளக்கப்பட்டுள்ளன . சுருக்கம், தெளிவு, செறிவு, அறிவியல், செம்மை ஆகியவை இவ்வகராதியின் சிறப்புகள் ஆகும். ஆங்காங்கு அறிய அட்டவணைகள் உயரிய கருத்துக்களின் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
V
இவ்வகராதி சராசரி வாசகர்களைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, சைவசித்தாந்தம் குறித்து அனைத்துச் செய்திகளையும் அறிய இவ் வாசகர்களுக்குப் பெரிதும் உதவும்.
இவ்வகராதியின் கையெழுத்துப் படியைப் படித்துப் பார்த்துச் செம்மை பெறுவதற்குரிய கருத்தேற்றங்களை வழங்கிய சைவசித்தாந்த அறிஞர் தஞ்சை திரு. டி.என்.இராமச்சந்திரன் அவர்களுக்கும்,மேற்கோள் நூல்களிலும் காணப்படாத சில சொற்களுக்கு எளிய விளக்கம் தந்து உதவிய பாவலரேறு தமிழறிஞர் தஞ்சை திரு.ச.பாலசுந்தரனார் அவர்கட்கும், இம்முழுமையான அகராதியை உரிய காலத்தில் வெளியிட்டுச் சைவசித்தாந்த உலகிற்குச் சீரிய தொண்டு செய்துள்ள கழக மேலாண்மை இயக்குநர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கட்கும் இவ்வகராதித் தொகுப்பாசிரியரின் உளங்கனிந்த நன்றி உரித்தாகும்.
இவ்வகராதியின் குறைநிறைகள் வாசகர்களிடமிருந்து இனிதே வரவேற்கப்படுகின்றன.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
- பேரா.அ.கி.மூர்த்தி
- பேரா. அ.கி.மூர்த்தி
- தொல்காப்பியரகம்
- 123/8, சூளைமேடு நெடுஞ்சாலை,
- பாண்டியன் நிழற்சாலை,
- புதுஅங்காடித் தெரு, சென்னை -94
- தொ.பே. - 4722205.