loading

தாலி வகைகள்

பதிவுற்ற நாள் 25 Nov 2022 |

என்னிடம் உள்ள சொற்களை வைத்து இப்பட்டியலை உருவாக்கி உள்ளேன். ஆனால் இதனை விரிவு செய்யும் அளவிற்கு மதியின்மையால், அப்பணியை விட்டு விடுகிறேன். இதனை கட்டுரையக்கும் muyarchiயில் நேரம் உள்ளோர் இறங்கலாம். தமிழர் வாழ்முறைகளில் இதுவும் ஒன்று என எண்ணுகிறேன்.

அச்சுத்தாலி

  • காசுமாலை
  • வார்ப்புத் தாலி .

    ஆமைத்தாலி

  • ஆமைவடிவுள்ள தாலி. ஆமைத்தாலிபூண்ட (திவ். பெரியாழ், 1, 7, 2).

    ஐம்படைத்தாலி

  • கழுத்திலே பிள்ளைகள் அணியும் திருமாலின் ஐம்படை உருவமைந்த அணி

    ஒற்றைத்தாலி

  • தாலி மாத்திரமுள்ள கழுத்தணி .

    கட்டுத்தாலி

  • மறவருக்குள் வழங்கும் ஒருவகைத்தாலி. (E.T.)

    கட்டுப்பெண்தாலி

  • சில தாழ்ந்த சாதிகளில் புனர்விவாகத்திற் சடங்கின்றிக் கட்டுந்தாலி.

    கள்ளத்தாலி

  • பிறர் மணம் புரியாதவாறு தனக்கு பாத்திய முள்ள ஒரு பெண்ணிற்குத் திருட்டுத்தனமாகக் கட்டும் தாலி.

    கொடித்தாலி

  • சரட்டுத் தாலி .

    சங்குத்தாலி

  • சங்கினாற் செய்யப்பட்டு மகளிரணியுந் தாலி.

    சங்குத்தாலிவெள்ளாளர்

  • சங்கினாலியன்ற தாலியை மகளிர் பூணும் வழக்கமுடைய ஒருவகை வேளாள சாதியார்.

    சிறுதாலி

  • வைப்பாட்டிக்குக் கொடுக்குந் தாலி .
  • கணவனது வாழுநாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன் எப்பொழுதுமுள்ள தாலி.

    சிறுதாலிக்கட்டு

  • கைக்கோளரில் மணத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தைமகளை விரும்பின ஒருவன், அவள் தன்னை மணம் புரியும்படி தாலியையேனும் துணியையேனும் தூங்கும்போது அவள்கழுத்திற் கட்டும்மரபு.

    தாலிகட்டுதல்

  • உண்மையிற் கணவனாகாது பேர்மாத்திரையில் ஒருத்திக்கு ஒருவன் தாலிகட்டும் ஒருவகைச் சடங்கு

    தாலிக்கயிறு

  • மாங்கலியம் கோப்பதற்குரிய மஞ்சள் பூசிய சரடு

    தாலிக்கொடி

  • தாலி கோப்பதற்கான பொற்சரடு

    தாலிக்கொழுந்து

  • பனையின் வெண்குருத்தாலான அணிகலன் .

    தாலிக்கோவை

  • தாலியுருவோடு கோப்பதற்கான பலவகை உருக்கள்

    தாலித்துக்கம்

  • கணவன் இறந்ததாலுண்டாந் துயரம்

    தாலிபெருகுதல்

  • தாலிச்சரடு அறுதல்

    தாலிமணிவடம்

  • தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக்கொடி

    நடுவீட்டுத்தாலி

  • விதவை விவாகத்துக்கு வன்னியர் வழங்கும் பேர்

    நவதாலி

  • நவக்கிரகசாந்தியாக விளக்கிடு கல்யாணத்தில் சிறுமிக்குக் கட்டும் ஒருவகைத்தாலி

    நாகபடத்தாலி

  • கழுத்தணிவகை

    நாமத்தாலி

  • கார்காத்த வேளாளரது விளக்கிடு கலியாணத்தில் பெண் கழுத்தில் அணியும் தாலிவகை .

    நெற்சிறுதாலி

  • a kind of tali

    பிள்ளைத்தாலி

  • பரவரில் கல்யாணமாகாத சிறுமகளிர் பூணுங் கழுத்தணிவகை. Parav.

    புலிப்பல்தாலி

  • புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் - புறம்

    பொட்டுத்தாலி

  • பொட்டுவடிவான திருமங்கிலியம்.

    முளைத்தாலி

  • கழுத்தணியிற் கோக்கும் முளைபோன்ற பொன்னாபரணம்