loading

சதுரகராதி - பெயரகராதி

பதிவுற்ற நாள் 12 Feb 2022 | அகராதிகள் சதுரகராதி

“சதுரகராதி - பெயரகராதி” கைப்பேசியில் நிறுவல் முறை ..

https://thanithamizhakarathikalanjiyam.github.io/sathurakarathi_peyar

  • 1. முதலில் உங்கள் கைப்பேசியில் அஃக ௨௮௭ - Download for Android என்ற Android செயலியை நிறுவிக் கொள்ளுங்கள். (ஏற்கனவே “அஃக ௨௮௭” செயலி நிறுவி இருந்தால் மீண்டும் நிறுவ தேவை இல்லை.)
  • 2. பின்னர் சதுரகராதி - பெயரகராதி - Download for Android என்ற Android நூலை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
  • 3. அஃக ௨௮ செயலியில் அகராதி பிரிவில் உள்ள “Refresh” என்பதை கிளிக் செய்யவும்.
    ttak_mobi_refresh_higligt.png

  • 4. “சதுரகராதி - பெயரகராதி/” என்னும் சொல்லை தேடுங்கள்.

    • 4.1. “சதுரகராதி - பெயரகராதி” என்பது அகராதி ஆதலால் அகராதி பற்றிய குறிப்பு மட்டும் வரும், பொருள் காண வேண்டிய சொல்லை தேடுபட்டியில் தேடினால் அதற்குரிய பொருள் வரும்.

குறிப்பு: கைபேசியில் நிறுவல் பற்றிய காணொளி இங்கு TTAK Tamil English dictionary installation in android phone உள்ளது.

அனைவரின் கைகளிலும் இந்தச் சொற்களைக் கொண்டு செல்ல இந்த அகராதியைக் கைபேசி வடிவில் தருகிறேன். தமிழ் வாழ் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இந்தப் பணிகள் அனைத்தும் அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் உருவாக்கப் படுகிறது.
  • புத்தகங்களில் முடங்கிக் கிடக்கும் சொற்களை மக்கள் மத்தில் பரப்ப வேண்டுமென்ற நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
  • இந்தப் பணி எவ்வித வணிகவியல் நோக்கமும் அற்றது.
  • இதில் உருவாக்கப்படும் அகராதிகள் அனைத்தும் இணையப் பொதுவெளியில் காணக் கிடைப்பவை. முக்கியமாக விக்கி மூலத்தில் இருந்தோ அல்லது தமிழிணையக் கழக இணைய தளத்தில் இருந்தோ பெறப் பட்டவை.
  • தனிப்பட்ட நபர்களின் பயன் பாட்டிற்கு மட்டுமே / தனிசுற்றுக்கு இந்த அகராதிகள் கைபேசியக்கம் செய்யப்படுகின்றன.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தனிபட்ட நபர்கள் ஏதேனும் அகராதிகளை வைத்து இருந்தால் அதனை இங்கு பதிவேற்ற எனக்கு பகிரலாம். முகவரி pitchaimbox-tic2019@yahoo.com

இப்பணி காப்புரிமை-அற்றது,

பிச்சைமுத்து மு.

சதுரகராதி - பெயரகராதி

  • பெயரகராதி
  • This work is forked from https://github.com/ramasamy-duraipandy/tamil-pulavar

வீரமாமுனிவர் 1710இல் தமிழகம் வந்தார். அதற்கு முன்பாக தமிழகராதிகள் இருந்தாலும் தமிழ்-தமிழ் அகராதிகள் இருக்கவில்லை. சதுரகராதி என்ற பெயரில் வீரமாமுனிவர் முதல் தமிழ்-தமிழ் அகராதி படைத்தார். 1732 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் சதுரகராதி நிறைவுற்றதை வீரமாமுனிவர் அந்நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். சதுரகராதி முதலில் 1919ஆம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப்பட்டது.[1] பண்டைய நிகண்டு முறையைக் கடந்து, அகராதி என்றொரு புது வகைப் படைப்பு தமிழில் தோன்ற வீரமாமுனிவர் காரணமானார்.

சதுரகராதி என்றால் நான்கு வகையான அகராதிகள் அடங்கிய தொகுதி என்பது பொருள் . முதலாவது உள்ளது பெயரகராதி . இதில் ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் தரப்பட்டுள்ளன . இரண்டாவது பொருளகராதி . இதில் தெய்வப் பெயர் , மக்கட்பெயர் முதலிய பொருட்பெயர்களை அகரநிரலில் வைத்து அவ்வப் பொருட்கு உரிய பல பெயர்களும் அகரநிரலில் சுட்டப்பட்டுள்ளன . மூன்றாவதாகத் தொகையகராதியில் இருசுடர் , முக்குணம் என்றாற் போல எண்தொகையாய் வரும் பொருள்களுக்குரிய விளக்கங்கள் அகரநிரலில் அமையக் காணலாம் .

நான்காவதான தொடையகராதியில் செய்யுள்களில் வரும் எதுகைத் தொடர்களை அகரநிரலில் தருகின்றார் . இதில் குறிற்கீழெதுகை , நெடிற்கீழெதுகை என இருபகுதி உண்டு . இவற்றில் படித்தல் , பிடித்தல் , பொடித்தல் , வடித்தல் , முடித்தல் என்றாற்போலவும் ஊராண்மை , ஏராண்மை , பேராண்மை என்றாற்போலவும் சொற்களை அமைத்துப் பொருளும் சுட்டியுள்ளார் . இப் பகுதி சூடாமணி நிகண்டில் ககர எதுகை முதல் னகர எதுகை வரையிலும் சொற்களை எதுகையடைவில் கோத்துப் பொருள் விளக்கிய பான்மையில் உள்ளது .

இந்தச் சதுரகராதி 18 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டபோதிலும் முழுமையாய் அச்சில் வந்தது 19ஆம் நூற்றாண்டில் 1824 ஆம் ஆண்டிலேயே ஆகும் . இந்த அகராதிக்குக் காலந்தோறும் பல பதிப்புகள் - பத்துப் பதிப்புகளுக்கு மேல் - வந்துள்ளன . பின்னால் வளர்ந்து பெருகிய தமிழ் - தமிழ் அகரமுதலிகளுக்கு எல்லாம் மூலநூலாய் விளங்குவது சதுரகராதியே .