வெட்டப்பட்ட தமிழ் எழுத்துக்கள்
கணிணியில் முக்கியமாக தரவுத்தளங்களில் தமிழை சேமிக்கும் போது, ஒரு வருடல் மிகப் பெரும் வருடலை பொறியாளர்களால் காண முடிகிறது. அதாவது UTF8-ல் தமிழுக்கு ஏன் 247-எழுத்துக்களுக்கும் ஒருங்குறி சேர்க்கவில்லை?
கிரந்த எழுத்துக்களுக்கு தனித் தனி ஒருங்குறி எண்கள்:
மாறாக ஹ,ஷ,ஸ்ரீ,ஸ,ஜ ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளன. காரணம், தமிழர் எழுதுகின்றனர் என்கின்றனர். சரி என ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஐந்து எண்கள் தனிதனி எண்கள். ஆனால் தமிழின் 247 எழுத்துகளுக்கு இல்லை. ஏன்?
ஆனால் தமிழ் எழுத்துகளுக்கு வெட்டி ஒட்டு எண்கள்? எப்புடீஈ?
கிரந்தம் சரி, அப்படி என்றால் தமிழர், எழுதும் 247 எழுத்துக்களை ஏன் ஒருங்குறியில் சேர்க்கவில்லை? எழுத்து கணக்கே இல்லாத, சீன மொழிக்கு 5000 ஒருங்குறிகள் உள்ளன. ஆனால் தெளிவான எழுத்து வடிவம் பெற்ற, நம் தமிழ் மொழியை சிதைத்து விட்டனர். அதுவும் முழு எழுத்துக்களை, வெட்டி வெட்டி ஒருங்குறி; ஒதுக்கீடு செய்க! என Unicode Consortium-க்கு பரிந்துரை செய்த புண்ணிவான்கள் எவரோ? என இதுவரைத் தெரியவில்லை.
கி என்றால் இரண்டு எழுத்துக்கள் - UTF8-ல்:
அதாவது கி என்றால் க ி என வெட்டி பின்வருமாறு எழுத்துக்களை கத்தியை எடுத்து வெட்டி உள்ளனர், இந்த தமிழ் மெத்த படிச்ச புண்ணியவான்கள். மேலும் சில வெட்டுக்களை இங்கு காண்போம்
தமிழை வெட்டியவர்கள் யாரோ?
தமிழைக் கொலை செய்பவர்களைக் கண்டு உள்ளோம், ஆனால் தமிழ் எழுத்துக்களை வெட்டிய நபர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். UTF8ன், இம்முறை தவறு எனத் தெரிகிறது; ஆனால் அந்த மாஹா பெரியவர்கள், UTF8-ல் வெட்டலை இணைத்து விட்டு உள்ளனர்.
பின்வருமாறு எழுத்துக்களை கொலை செய்தல்
கா = க + ா கி = க + ி கீ = க + ீ கு = க + ு கூ = க + ூ கெ = க + ெ கே = க + ே கை = க + ை கொ = க + ொ கோ = க + ோ கௌ= க + ௌ
சரி கோட்பாடு என்னப்பா?
ஒரே எழுத்துக்களை வெட்டி பின்னர் ஒட்டி பின்னர் ஒரே மாதிரி - ஒரே எழுத்து போன்று - காண்பிக்க வேண்டும். இதுதான் அந்தக் கோட்பாடு.
தமிழுக்கு உள்ள 247-எழுத்துக்களுக்கும் எண்கள் தேவை:
தற்போதைய நடைமுறையைக் களைந்தாக வேண்டிய கட்டாயம் தமிழருக்கு உண்டு.
தரவுத்தள பிரச்னை (Database Dilemma):
சரி தரவுத்தளத்தில் சேமித்தால்,
காடு - இரண்டு எழுத்துதானே? ஆனால் UTF8-ல் இவர்கள் செய்த பெரிய கண்டு பிடிப்பால், காடு - நான்கு எழுத்து = க + ா + ட + ு நான்கு எழுத்தாம். எப்படின்னு பாருங்கள் மக்களே!
இது மாபெரும் தவறு. தரவுத்தளத்தில் செம்மையாக இயக்க முடியவில்லை. ஒவ்வொரு சொற்களுக்கு, முறையும் மறு கூட்டல் விதி செய்ய வேண்டி இருக்கிறது.
இவ்வாறுதான் தமிழ் எழுத்துக்களின் பாதியை விட்டு விட்டுதான் எழுதுகிறார்களா? நல்ல வேலை ஒன்றாம் வகுப்பு வாத்தியாருக்கு, இந்தப் புண்ணியவான்கள் பாடம் எடுக்க வில்லை. 247 எழுத்துக்களை வெட்டி ஒட்டி, ஏன் மெத்தப் படிச்ச மேதாவிகள் தமிழைக் குறுக்கி விட்டனர்? நல்லவேளை இவர்களிடம் நான் தமிழ் படிக்கவில்லை.
யாருடைய Influence இப்படிச் செய்தது? தெரியவில்லை.
குறிப்பு: அவசியம் பிற குழுமங்களுக்கும், பிற நண்பர்களுக்கும் அனுப்புங்கள். நன்றி.