loading

கைபேசியகராதி

பதிவுற்ற நாள் 21 Jul 2018 | Uncategory

அஃக ௨௮௭ - கைபேசியகராதி

நன்றிகள் தமிழ்-உலகம்

தனித்தமிழகராதிக்களஞ்சியம் அடுத்த பதிப்பாக கைபேசிச்செயலி வெளியிடப்படுகிறது. முதலில் தமிழ்-விக்சனரி அகராதியுடன் இயங்குவதாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதிக தகவல்கள் இங்கு உள்ளன.

உங்களின் அகராதிகளையும் சேர்க்கலாம்

ஒரே மின்னஞ்சல் இசையினி அல்லது மின்தமிழ் குழுமத்திற்கு அனுப்புங்கள். உங்களின் பெயரில் நீங்கள் உருவாக்கி உள்ள சொற்களைக் கொண்டு புதிய அகராதியாகச் சேர்க்கப்படும். தேவையான பயனர்கள் தரவிறக்கம் செய்து உபயோகம் செய்து கொள்ள முடியும்.

அகராதிப் பட்டியல்

  • அறிவியல் அகராதி - பேரா. அ. கி. மூர்த்தி
  • அணுவியல் - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
  • அறிவியல் களஞ்சியம் - மணவை முஸ்தபா
  • உணவுகள் - திருத்தம் பொன். சரவணன்
  • 2018 தொகுப்பு - இணைய நண்பர்கள்

போன்ற அகராதிகளையும் வரும் காலத்தில் தனித்தனி அகராதிகளாக வெளியிட இருக்கிறோம்.

புதிய அகராதிகள் இணைப்பு

GitHub-ல் புதிய அகராதிகளை தாங்களே சேர்த்துக் கொள்ளலாம். உருவாகும் இடம் இங்கு உள்ளது.