கைபேசி தொகுப்புரை
கைபேசி தொகுப்புரை
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:596)
என்பார் வள்ளுவப் பெருந்தகை.
அந்த வகையில் தனது வாழ்வின் அடித்தளத்தில் இருந்து வரலாற்றில் இடம் பிடித்த மனிதர்கள் எவ்வாறு முன்னேறினார்கள் என்பது பற்றி ஒரு தொகுப்பு உண்டு என்றால் அது சிங்கப்பூர் வானொலியில் அறிவிப்பாளர் “திரு. அழகிய தமிழ் பாண்டியன்” அவர்கள் தொகுத்து வழங்கிய “வானம் வசப்படுமே” என்ற வானொலித் தொடர் ஆகும். இந்தத் தொடர் வியாழக் கிழமைகளில் மாலை 4.25 மணிக்கு ஒலிபரப்பாகும் அதனை கேட்பதற்காகவே நான் பள்ளியில் இருந்து 4 கி.மீ வெகு விரைவாக வீட்டிற்கு ஓடி வந்து விடுவேன். அப்போது சிங்கப்பூர் வானொலி அது எங்கள் பகுதிகளில் சிற்றலைகளில் (Short wave frequencies) கிடைக்கும். வானம் வசப்படுமே தொடரை சுமார் மூன்று நிமிடம் கேட்பது என்பதே பெரும் பாக்கியம். காலம் கடந்தது கணினிப் பொறியாளர் ஆனேன், சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் மாணவன் சிலம்பு.ஆர் அவர்களின் தொடரை வலைப்பூவில் பின் தொடர்ந்தவர்களின் பட்டியலில் நானும் ஒருவன் ஆவேன். இன்று அந்தத் தொடரை கைப்பேசி நூலாக வெளியிட இறைவன் அருள் புரிந்து இருக்கிறான். இறைவனுக்கு நன்றிகள் பல.
வானொலித் தொக்குப்பாக படைத்தவர் திரு. அழகிய தமிழ் பாண்டியன் ஆவார், அதை வலைப்பூ தொக்குப்பாக படைத்தவர் மாணவன் சிலம்பு.ஆர் ஆவார்.
தமிழில் நூல்களை கைபேசியில் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிக்கு தனது கட்டுரைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்த மாணவன் சிலம்பு.ஆர் அவர்களுக்கு நன்றிகள் பல. “வரலாற்று நாயகர்கள்” என்னும் பெயரில் இந்தத் தொகுப்பு வெளியிடப்படுகிறது.
கட்டுரைகள் அனைத்தும் வரலாற்று நாயகர்கள் என்னும் தளத்தில் இருந்து பெறப்பட்டவை.
மாணவன் சிலம்பு.ஆர் அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
கைபேசியாக்கம்,
மு.பிச்சைமுத்து
2019-08-29-