ஆசிரியர் பற்றி
ஆசிரியர் பற்றி
ஆண்டுகள் பல கடந்தும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அறிஞர்களின் வரலாறுகளை படித்து அவர்களைப் போல மாறவிட்டாலும் கூட அதிலிருந்து நல்ல விசயங்களை கற்றுக்கொள்ளவும், முக்கியமாக வாழ்வில் தன்னம்பிக்கை அளிக்கவும் இந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் மின் நூல் தொகுப்பு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். வரலாற்றில் தடம் பதித்த மாமனிதர்களைப்போலவே உங்கள் வாழ்விலும் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் தொடர்ந்து போராடுங்கள். நீங்கள் விரும்பும் இலக்கை அடைந்து, வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்!
வரலாற்று நாயகர்களின் தொகுப்புகளில் என் இதய எண்ணங்களை வலைத்தளத்தில் பதிவு செய்ய அனுமதி தந்து வாழ்த்துரை நல்கிய சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் படைப்பாளர் ஐயா திரு. அழகிய பாண்டியன் அவர்களுக்கும், மற்றும் ஒலி 96.8 வானொலிக்கும், வழியெல்லாம் வழிகாட்டியாய் நின்று ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது இதயத்தின் அடித்தளத்தினின்று உதயமாகும் அன்பின் நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.
வாழ்த்துகளுடன்..! மாணவன் சிலம்பு. ஆர்