புதிய சொற்கள் உருவாக்கும் மென்பொருள் கூறு
- தனிதமிழகராதிக்களஞ்சிய விண்டோசுப் பதிப்பு என்பது உலகு வாழ் தமிழ் மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது என்பதை, முதல் மென்பொருள் பதிப்பை வெளியிட்ட சமயத்தில், எமக்குக் கிடைத்த ஆயிரக் கணக்கான மின்னஞ்சல்களின் வழியே தெரிந்து கொண்டோம். எனவே புதிய சொல் உருவாக்கியை மிகு விரைவில் வெளியிட வேண்டும் என்னும் உந்துதலை உருவாக்கியுள்ளது. எனவே புதிய சொல் உருவாக்கியின் அமைப்பு பற்றிய ஒரு முன்னோட்டம் என்றே இந்தப் பதிவைக் கூற வேண்டும்.
- தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது என்பது கடினம் என்றும்; தமிழ் புதிய சொற்களை உருவாக்க முடியாது என்பதும்; தமிழ் அறிந்தோரின் கருத்தாக மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது அதனை எளிமை படுத்த வேண்டும் என்னும் நோக்கில் தனிதமிழகராதிக்களஞ்சிய விண்டோசு பதிப்பில் ஒரு புதிய கூறாக அடுத்த பதிப்பில் வெளிவர இருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை இங்கு ஆராய இருக்கிறோம்.
வானொலி அறிவிப்பில் தமிழ் பரிமாறல்
- வானொலி அறிவிப்பில் தமிழ் உச்சரிப்பு என்பது மிக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பது வானொலி அறிவிப்பை கற்றுக் கொடுக்கும் மதிப்பிற்குரிய குருமார்களின் கருத்தாக இருக்கிறது. ஏன் தமிழ் வானொலியின் தந்தை எனக் கூறப்படும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்த மயில் வாகனன் தொடர்ந்து இப்போது இருக்கும் நேர்த்தியான அறிவிப்பாளர் வரைக்கும் உச்சரிப்பு நேர்த்தி என்பது தமிழுக்கு அவசிமாக இருக்கிறது. எனவே அறிவிப்பு அறைக்குச் செல்லும் ஒரு அறிவிப்பாளர், கூறும் கருத்தை முன்னரே விளக்கமாக எழுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். எதற்காக இவ்வளவு அளப்பரை என்று பல சமயம் கடிந்து கொண்டதும் உண்டு. அதற்க்கு அவர்கள் கூறிய ஒரே பதில் தமிழ் என்பது கட்டமைக்கப் பட்ட மொழி, அதனை கட்டமைத்தே வாசகர்களுக்கு பரிமாற வேண்டும் என்பர். அவர்கள் கொடுத்த விளக்கத்தின் அருமை அப்போது தெரியவில்லை; ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கத்தின் அருமையை தற்போது உணர முடிகிறது. எப்படி?
தமிழில் முதல் எழுத்துக்கள் என்று ஒன்று உண்டு
- இவ்வகை எழுத்துக்களை வார்த்தையின் எஞ்சின் என்று கொள்ளலாம். அதனைத் தொடர்ந்துதான் தமிழில் பிற எழுத்துக்கள் சேர்ந்து ஒரு சொல் உருவாகிறது. சரி அப்படி என்றால் எஞ்சின் எழுத்துக்கள் யாவை?
- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ, ங, ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ, சௌ, ஞ, ஞா, ஞெ, ஞொ, த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ, ந, நா, நி, நீ, நு, நூ, நெ, நே, நை, நொ, நோ, நௌ, ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, போ, பௌ, ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ, ய, யா, யு, யூ, யோ, யௌ, வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ
- ஆகிய 103 எழுத்துக்கள் கொண்டுதான் சொற்கள் ஆரம்பமாகும். இதனை நன்னூல் விதி 102 - 106 வரை காண முடிகிறது. சரி வார்த்தையின் முதல் என்று இருந்தால் இறுதி என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? அதனைத்தான் நன்னூல் ஈறு என்று கூறுகிறது.
தமிழ் சொற்களின் முதல் எழுத்துக்கள்
சொல்லின்
முதலெழுத்து |
||||||||||||
ஃ | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
தமிழில் ஈறு எழுத்துக்கள்
- ஒரேழுத்து ஒரு மொழி நெடில் உயிர் எழுத்துக்கள்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
- அளபடையில் மட்டும் ஈறாகும் குறில் உயிர் எழுத்துக்கள்: அ, இ, உ, எ, ஒ
- மேலும் உயிர் மெய் எழுத்துக்கள்: க, கா, கி, கீ, கு, கூ, கே, கை, கோ, கௌ, ங, ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙே, ஙை, ஙோ, ச, சா, சி, சீ, சு, சூ, சே, சை, சோ, ஞ், ஞ, ஞா, ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞோ, ட, டா, டி, டீ, டு, டூ, டே, டை, டோ, ண், ண, ணா, ணி, ணீ, ணு, ணூ, ணே, ணை, ணோ, த, தா, தி, தீ, து, தூ, தே, தை, தோ, ந், ந, நா, நி, நீ, நு, நூ, நே, நை, நொ, நோ, ப, பா, பி, பீ, பு, பூ, பே, பை, போ, ம், ம, மா, மி, மீ, மு, மூ, மே, மை, மோ, ய், ய, யா, யி, யீ, யு, யூ, யே, யை, யோ, ர், ர, ரா, ரி, ரீ, ரு, ரூ, ரே, ரை, ரோ, ல், ல, லா, லி, லீ, லு, லூ, லே, லை, லோ, வ், வ, வா, வி, வீ, வு, வூ, வே, வை, வோ, வௌ, ழ், ழ, ழா, ழி, ழீ, ழு, ழூ, ழே, ழை, ழோ, ள், ள, ளா, ளி, ளீ, ளு, ளூ, ளே, ளை, ளோ, ற, றா, றி, றீ, று, றூ, றே, றை, றோ, ன், ன, னா, னி, னீ, னு, னூ, னே, னை, னோ மட்டுமே ஒரு வார்த்தையின் ஈறாக அமையும். இதனை நன்னூல் விதி 107 - 109 வரை விளக்குகிறது.
தமிழ் சொற்களின் இறுதி எழுத்துக்கள்
சொல்லின்
ஈற்றெழுத்து |
||||||||||||
ஃ | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
இடை எழுத்துக்கள் இப்பதிப்பில் சேர்க்கப்படவில்லை.
வருகின்ற பதிப்புகளில் இந்த வசதி அவசியம் சேர்க்கப்படும்.
- இந்த வசதி 2.8.4 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டது.
மென்பொருளின் அமைப்பு
- மேற்கண்ட அமைப்பை உணர்ந்து இந்த மென்பொருள் கூறு உருவாக்கப் பட்டு உள்ளது. அதன் அமைப்பு இவ்வாறு இருக்கிறது.
எப்படி இந்த மென்பொருளை புதிய சொற்கள் உருவாக்குவதற்குப் பயன்படுத்துவது:
- முதலில் முதல் எழுத்தை DoubleClick செய்தால் அந்த எழுத்தில் உள்ள சில சொற்களை படத்தில் உள்ள 5 - ம் இடத்தில் பொருளுடன் காண்பிக்கும்.
- மேலும் 2 - ம் இடத்தில் உருவாக்கப்படும் சொல் உருவாகிக் கொண்டு இருக்கும்.
- பின்னர் பரிந்துரைக்கும் 3 - ம் இடத்தில் இருந்து சேர்க்க விரும்பும் எழுத்தை DoubleClick செய்யலாம் அல்லது ஈறு எழுத்தை 4 - ம் இடத்தில் இருந்து சேர்க்க விரும்பும் எழுத்தை DoubleClick செய்யலாம்.
இவ்வாறு புதிய அர்த்தம் உள்ள சொல்லை தமிழ் இலகணத்தோடு உருவாக்க முடியும்.
எவ்வாறு புதிய சொல் பயன்பாட்டிற்கு வரும்
இதுவரை அதற்க்கு விடை தெரியவில்லை. பிறர் எப்போது நீங்கள் உருவாக்கிய சொல்லைப் பயன்படுத்துவர்? விடை தெரிந்தால் பகிருங்களேன்.
நான் உருவாக்கிய முதல் புதிய சொல் தூகன்!?
- தூ எனும் முதல் எழுத்தை அழுத்தினேன் (1 - இடத்திலிருந்து).
பல சொற்கள் வந்தன. நான் அடுத்த எழுத்து க இருக்கலாம் என எண்ணினேன் (2 - இடத்திலிருந்து).
- தூகம் என்றால் காற்று என களஞ்சியம் பரிந்துரைக்கிறது. எனவே ஒரு சொல் காற்றை போல வேகமானவன் என்னும் பொருளில் ன் என பரிந்துரைக்கும் எழுத்தை 3 - ம் இடத்திலிருந்து தேர்ந்தெடுத்தேன். தூகன் எனும் சொல் உருவானது.