loading

தமிழ்ச் சொல்லின் இடைநிலைகள்

பதிவுற்ற நாள் 26 Feb 2018 |

தமிழில் முதல் எழுத்துக்கள் / ஈறு எழுத்துக்கள்

  • இவ்வகை எழுத்துக்களை வார்த்தையின் எஞ்சின் என்று கொள்ளலாம். அதனைத் தொடர்ந்துதான் தமிழில் பிற எழுத்துக்கள் சேர்ந்து ஒரு சொல் உருவாகிறது. சரி அப்படி என்றால் எஞ்சின் எழுத்துக்கள் யாவை?

இவைகள் சொல்லுருவாக்கி கூறுவில் சேர்க்கப் பட்டு உள்ளன பதிப்பு 2.8.3 முதல் இந்த கூறு செயல்பாட்டில் உள்ளது. மேலும் அறிந்து கொள்ள புதிய சொற்கள் உருவாக்கும் மென்பொருள் கூறு

தமிழில் இடை எழுத்துக்கள்

(பதிப்பு 2.8.4 முதல்)

  • ஈரொற்றுக்கள்
    1. முதல் மற்றும் ஈறு எழுத்துக்களின் இடையில் ய், ர், ழ் [119] என்னும் மெய்கள் வந்தால் அவற்றைத் தொடர்ந்து க்,ங்,ச்,ஞ்,த்,ந்,ப்,ம் என்னும் ஒற்று எழுத்துக்களும் வரும்.
  • ககர மெய்கள் மயங்கும் இடம்
    1. க்[110 & 118], ங்[111], ட்[113], ற்[113], ண்[114], ன்[114], ய்[116], ர்[116], ழ்[116], ல்[117], ள்[117] என்னும் மெய்களைத் தொடர்ந்து க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ ஆகிய மெய்கள் வரும்
  • ஙகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ய் [116], ர் [116], ழ் [116], ங் [118] என்னும் மெய்களைத் தொடர்ந்து ங என்னும் எழுத்தும் வரும்.
  • சகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ச் [110 & 118], ஞ் [112], ட் [113], ற் [113], ண் [114], ன் [114], ய் [116], ர் [116], ழ் [116], ல் [117], ள் [117] என்னும் மெய்களைத் தொடர்ந்து ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ என்னும் எழுத்தும் வரும்.
  • ஞகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ய் //116, ர் //116, ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து ஞ,ஞா,ஞெ,ஞொ என்னும் எழுத்தும் வரும்.
    2. ண் //114, ன் //114, ஞ் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ஞ, ஞா, ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞை, ஞொ, ஞோ, ஞௌ என்னும் எழுத்தும் வரும்.
  • டகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ண் //114 ய் //116 ர் //116 ழ் //116 ட் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ட,டா,டி,டீ,டு,டூ,டெ,டே,டை,டொ,டோ,டௌ என்னும் எழுத்தும் வரும்.
  • ணகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ய் //116 ர் //116 ழ் //116 ண் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ண, ணா, ணி, ணீ, ணு, ணூ, ணெ, ணே, ணை, ணொ, ணோ, ணௌ என்னும் எழுத்தும் வரும்.
  • தகர மெய்கள் மயங்கும் இடம்
    1. த் //110 118 ந் //112 ய் //116 ர் //116 ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ என்னும் எழுத்தும் வரும்.
  • நகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ய் //116 ர் //116 ழ் //116 ந் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ந, நா, நி, நீ, நு, நூ, நெ, நே, நை, நொ, நோ, நௌ என்னும் எழுத்தும் வரும்.
  • பகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ப் //110 & 118 ட் //113 ற் //113 ண் //114 ன் //114 ம் //115 ய் //116 ர் //116 ழ் //116 ல் //117 ள் //117 என்னும் மெய்களைத் தொடர்ந்து ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,பௌ என்னும் எழுத்தும் வரும்.
  • மகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ண் //114 ன் //114 ய் //116 ர் //116 ழ் //116 ம் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ என்னும் எழுத்தும் வரும்.
  • யகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ய் //116 ர் //116 ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து ய, யா, யு, யூ, யோ, யௌ என்னும் எழுத்தும் வரும்.
    2. வ் //111 ஞ் //112 ந் //112 ண் //114 ன் //114 ம் //115 ய் //116 & 118 ர் //116 ழ் //116 ல் //117 ள் //117 என்னும் மெய்களைத் தொடர்ந்து ய, யா, யி, யீ, யு, யூ, யெ, யே, யை, யொ, யோ, யௌ என்னும் எழுத்தும் வரும்.
  • லகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ல் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ல, லா, லி, லீ, லு, லூ, லெ, லே, லை, லொ, லோ, லௌ என்னும் எழுத்தும் வரும்.
  • வகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ய் //116 ர் //116 ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ என்னும் எழுத்தும் வரும்.
    2. ண் //114 ன் //114 ம் //115 ல் //117 ள் //117 வ் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து வ, வா, வி, வீ, வு, வூ, வெ, வே, வை, வொ, வோ, வௌ என்னும் எழுத்தும் வரும்.
  • ளகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ள் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ள, ளா, ளி, ளீ, ளு, ளூ, ளெ, ளே, ளை, ளொ, ளோ, ளௌ என்னும் எழுத்தும் வரும்.
  • றகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ன் //114 ற் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ற, றா, றி, றீ, று, றூ, றெ, றே, றை, றொ, றோ, றௌ என்னும் எழுத்தும் வரும்.
  • னகர மெய்கள் மயங்கும் இடம்
    1. ன் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ன, னா, னி, னீ, னு, னூ, னெ, னே, னை, னொ, னோ, னௌ என்னும் எழுத்தும் வரும்.

பயன் படுத்தும் முறை

ஏற்கனவே பதிப்பு 2.8.3 யுடன் இடை எழுத்துக்கள் செருகளுக்கான வசதி இந்த பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் முதல் மற்றும் இறுதி எழுத்துக்கள் தவறாக இருப்பின் அவற்றைக் கண்டறிய பச்சை மற்றும் சிகப்பு நிறங்கள் மூலம் சொல்லின் முதல் மற்றும் இறுதி எழுத்தினை அறிந்து கொள்ளலாம்.

பச்சை நிறம்

சொல்லின் எழுத்து விதிகளை பின்பற்றி இருந்தால் அது பச்சை நிறமாக காட்டப்படும்.

சிகப்பு நிறம்

சொல்லின் எழுத்து விதியின் படி உருவாக்காமல் இருந்தால் அது சிகப்பு நிறமாகக் காட்டப்படும்.

படத்தில் முதல் எழுத்து சரியாகவும் இறுதி எழுத்து தவறுதலாகவும் உள்ளது.

இடை எழுத்துக்களில் மெய் மயக்கம்

மேற்கண்ட படத்தில் இருப்பது போன்று த் என்னும் எழுத்தை தொடன்ர்து மயங்கும் ஒற்றுகளையும், மெய்களையும் மயங்கு மெய்கள் என்னும் பட்டியலில் காண முடிகிறது.

மயங்கு மெய்யாக து என்னும் எழுத்தை அழுத்தும் போது சொல்லானது முத்து என மாறுகிறது. அதே தருணத்தில் ஈறு எழுத்தையும் சோதனை செய்கிறது. பச்சை மற்றும் சிகப்பு வண்ணத்தின் மூலம் ஈறு எழுத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் முத்துய் போன்ற வரத்தை வரும் போது ய் வரும் போது அதனைத் தொடர்ந்து மற்றொரு ஒற்று வரும் என்பதால் மயங்கு மெய் பட்டியில் ஒற்றுக்களையும் மென்பொருள் கொடுக்கும்.