/ புறநானூறு
/ 088: எவருஞ் …
088: எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமானஞ்சி.
திணை: தும்பை. துறை; தானை மறம்.
யாவிர் அயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே. 5
88
நீவிர் யாராக இருந்தால் என்ன? உங்களைப் பின் தொடர்ந்து வரும் கூழைப்படையை வைத்துக்கொண்டு போரிட்டு வெல்வோம் என்று முனைவதை விட்டுவிடுங்கள்.
என் தலைவன்,
ஒளிரும் உயர்ந்த வேல்மழவர் (மறவர்) பின்னணி கொண்ட பெருமகன்.
முழவு போன்ற மார்பினைக் கொண்டவன்.
முழவு - விழாக்காலத்தில் நன்முழக்கத்துக்குப் பயன்படும் முழவு.
மார்பு – ஒளி வீசும் அணிகலன் பூண்ட மார்பு.