/ புறநானூறு / 193: ஒக்கல் …

193: ஒக்கல் வாழ்க்கை!

பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
 
னருடன் வாழும் இல்லற வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது.
அதள் = தோல்பறை
எறிதல் = அடித்தல்
களர்நிலம்.
நீண்ட களர்நிலம்.
வெண்ணிறக் களர்நிலம்.
களர்நிலம் என்பது நேற்றுநிலம்.
அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும்.
இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான்.
தட்குதல் = தளையாய் அமைதல்
அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம்.
ஒக்கல் வாழ்க்கையால் துன்பம்.
மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம்.
அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை.
ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும்.
இதுதான் வாழ்க்கை.
மாட்டைத் தளைக்கயிற்றில் கட்டி வைத்திருப்பர்.
தளைதல் = கட்டுதல்
பாடலில் இரண்டு சீர்களைக் கட்டிப்போடுதல் தளை.
மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல் கூடாது என்கிறது, இந்தப் பாடல்.