/ புறநானூறு / 293: பூவிலைப் …

293: பூவிலைப் பெண்டு!

பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி
துறை: பூக்கோட் காஞ்சி

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்,
எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ? 5

அளியள் தானே, பூவிலைப் பெண்டே!
 
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் = நெஞ்சை நிமிர்த்திப் போரிடுவோருக்குத் தளராது யானைமேலிருந்து தாக்கும் வேந்தன்,
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை – குறுநில மன்னன் பணிந்து பெண்ணைத் தந்துவிட வேண்டும் என்று முழக்கும் தண்ணுமையானது,
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் = எதிர்த்துத் தாக்காமல் நாணம் கொண்டு அமைவோர்க்கு ஒலிக்குமாயின்,
எம்மினும் பேர் எழில் இழந்து = புலவர் கூறுகிறார், தன்னைக்காட்டிலும் அழகிழந்து,
வினை என = தலைவிதியே என்று,
பிறர்மனைப் புகுவள் கொல்லோ = மறக்குடி மகன் அல்லாத வேந்தனாகிய பிறர் மனை புகுவாளோ,
பூவிலைப் பெண்டு = வேந்தன் தரும் பூவிலையைப் பெற்றுக்கொண்டு
எனப் பாடலில் உள்ளவாறு பொருளமைதி கண்டுகொள்ளலாம்.