/ புறநானூறு
/ 104: யானையும் …
104: யானையும் முதலையும்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது, 5
இளையன் என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
சிறுவர் விளையாடிக் கலக்கும் முழங்கால் அளவு நீரிலும் முதலை யானையை வீழ்த்தி இழுத்து அழித்துவிடும். என் தலைவன் அந்த முதலை போன்றவன்.
மறவர்களே! இளையவன் என்று அவனோடு போரிட்டு விளையாடாதீர்கள்.