/ புறநானூறு
/ 106: தெய்வமும் …
106: தெய்வமும் பாரியும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே. 5
நல்லது, தீயது என்று கடவுளுக்கு இல்லை. அற்பமான எருக்கம் பூவையும் கடவுள் சூடிக்கொள்வார். அதுபோல ஏதுமறியாத மடையன், பெண் யாராயிருந்தாலும் பாரி வழங்குவான்.