/ Tamil Pulvarkal / அகுதை

அகுதை

  • இவன் பரிசிலர்க்கு யானைகொடுக்கும் கொடையாளிகளுள் ஒருவன்; போர்செய்தலில் வல்லவன்; இவன் ஊர் மதுரை. இவற்றை, “இன்கடுங் கள்ளி னகுதை களிற்றொடு நன்கல னீயு நாண் மகி ழிருக்கை” (அகநா. 76) , “பாவடி யானை பரிசிலர்க் கருகாச், சீர் கெழு நோன்றா ளகுதை”, “மணநாறு மார்பின் மறப்போ ரகுதை, குண்டுநீர் வரைப்பிற் கூடல்” (233, 347) என்பவற்றாலுணர்க. இவனைப் புகழ்ந்த புலவர்: வெள்ளெருக்கிலையார், கபிலர்; இவன் பெயர் அஃதை யென்றும் பிரதியிற் காணப்படும்.