/ Tamil Pulvarkal / நெடுங்கழுத்துப் …

நெடுங்கழுத்துப் பரணர்

    • போருக்குச் செல்வோர் வெள்ளுடை உடுத்துச் செல்லவேண்டுமென்பது இவர் பாடலால் தெரிகின்றது. இவருக்கு இப்பெயர் உறுப்பால் வந்ததுபோலும்.

பரணர்

  • இவர் கபிலர்பால் மிக்க நேயமுடையவர். இது கபிலபரணர் என்னும் தொடரால் விளங்கும். இவர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடிக் கடல்பிறக்கோட்டிய கோச்செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன்மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றனர்; இதனை மேற்கூறிய பகுதியின் இறுதிக்கட்டுரையால் உணர்க. இவராற் பாடப்பட்டோர்: சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக்கோப் பெரும்பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனென்பார். “அமரர்ப் பேணியும்” என்னும் ஒளவையாருடைய பாட்டினால், அதியமான் நெடுமானஞ்சியை இவர் புகழ்ந்திருப்பதாகத் தெரிகின்றது. திருவள்ளுவமாலையிலுள்ள ‘மாலுங் குறளாய்’ என்னும் அரிய வெண்பா இவர் பெயரால் உள்ளது. இன்னும் இவரியற்றிய பாடல்கள் நற்றிணையிலும், குறுந்தொகையிலுமுண்டு; 11-ஆம் திருமுறையில் உள்ளதான சிவபெருமான் திருவந்தாதி யென்னும் பிரபந்தத்தின் ஆசிரியராகிய
  • பரணதேவநாயனாரென்பவர் இவரென்று சொல்லுவர். இவர் வேறு; வன்பரணர் வேறு. இரண்டு திருவிளையாடற் புராணங்களிலும் இவர் புகழப்பட்டிருக்கிறார். பதிற்றுப்பத்திலும் இந்நூலிலுமன்றி இவர் எட்டுத்தொகையில் இயற்றியனவாக உள்ள செய்யுட்கள் 61. இவர் பாடிய பாடல் ஒவ்வொன்றிலும் யாரையேனும் புகழாமலும் அக்காலத்து நிகழ்ந்த கதை எதையேனும் அமையாமலும் இரார்.