/ Tamil Pulvarkal / பெருஞ்சித்திரனா …

பெருஞ்சித்திரனார்

  • அன்பில்லாதவர்கள் எவ்வளவு செல்வ முடையவர்களாக இருப்பினும் அவர்களை இவர் மதிப்பவரல்லர்; 162, 207-8. ஊக்க முதலிய இயல்பு வாய்ந்தவர்; 161. குமணனுடைய வண்மையைப் புலப்படுத்துதல் முகமாகக் கடையெழுவள்ளல்களின் வரலாறுகள் சிறுபாணாற்றுப்படையிற் போலச் சுருக்கமாக இவராற் கூறப்பெற்றுள்ளன; 158. தம்முடைய தாய், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் ஆகிய இவர்கள் பசியால் வருந்துவதை இவர் குமணனுக்குக் கூறும் பகுதிகள் (159) கன்னெஞ்சையும் கரையச் செய்யும்; பசியால் வருந்தும் குழந்தைகளுக்கு அத்துன்பத்தைப் போக்குதற்பொருட்டு, அவ்வப்பொழுது தம் மனைவி செய்யும் உபாயங்களை இவர்கூறும் பகுதிகளும் (160) குமணனளித்த பரிசிலை அம்மனைவியிடங் கொடுத்து, “நீ இனிக் கவலையின்றி வாழ்” (163) என்று கூறுவனவும் அறிதற்பாலன; செய்யுளிலுள்ள பொருளமைதிகளை நோக்கியே இவருக்கு இப்பெயரை இட்டனர் போலும்; சித்திரம் - ஆச்சரியம். இவராற் பாடப்பட்டோன் குமணன்; இகழப்பட்டோர் : அதியமானெடுமானஞ்சி, இளவெளிமானென்பார்.