/ Tamil Pulvarkal / சோழன்குளமுற்றத் …

சோழன்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

    • தன்னாட்டில் வேளாண்மைத் தொழிலிற் சிறந்து விளங்கிய பண்ணனென்பவனுடைய அரிய குணங்களை இவன் பாராட்டிப் பாடினன். இவனது மற்ற வரலாற்றைப் பாடப்பட்ே்டார் பெயர் வரிசையிற்காண்க.

காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி

  • இவன் சோழபரம்பரையைச் சார்ந்தோன்: உறையூரில் இருந்தோன்: சோழன் நலங்கிள்ளிக்குப் பகைவன்: இவன் பெயர் நெடுங்கிள்ளியெனவும் வழங்கும்: ‘இவனைப் பாடியவர் கோவூர்கிழார். ‘இளந்தத்தன்‘ என்னும் புலவர் இவன் காலத்தவரே. ‘காரியாற்றுத் துஞ்சிய‘ என்பதற்குக் காரியாறென்னுமிடத்தில் இறந்த என்பது பொருள்.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

  • இவன் குளமுற்றமென்னும் இடத்தில் இறந்ததுபற்றி இப்பெயர் பெற்றான்.

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோவாழியாதன்

  • இவன் சிறந்த கொடையாளி; மிக்க வீரமுடையவன். இவனைப் பாடிய புலவர் குண்டுகட்பாலியாதனார்.

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

  • இவன் சிறந்த வீரன். இவனைப் பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார். காலேகப்பள்ளியெனவும் பிரதிபேத முண்டு.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

  • இவனது இராசதானி உறையூர்; மிக்க கொடையும் வீரமும் உடையோன். செய்யுள் செய்தலில் வல்லவன்; கருவூரை முற்றுகைசெய்து சேரனை வென்றவன்.‘ இவனைப் பாடிய புலவர்கள்: ஆலத்தூர்கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், கோவூர்கிழார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், வெள்ளைக்குடி நாகனார்; இவருள், இவன் இறந்த பின்பும் இருந்து பிரிவாற்றாது வருந்தியவர்கள்: மறோக்கத்து நப்பசலையார், ஐயூர்முடவனார், ஆடுதுறை மாசாத்தனார்.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி

  • இவன் மிக்க வீரச்செல்வமுடையோன்; வடநாட்டரசரை வென்று அடிப்படுத்தினோன். இவனைப்பாடிய புலவர்கள்: ஐயூர்முடவனார், மருதனிளநாகனார்.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

  • இவன் தன்னைச்சேர்ந்தோருக்கு மிக்க நன்மையும் பகைவருக்குத் துன்பமும் புரிபவன்; இவனைப் பாடியவர்: மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

  • இவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருமாவளவனோடு நட்புடையவன்; இவன் காலத்துப் புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.