/ Tamil Pulvarkal / வடமவண்ணக்கன் …

வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்

    • “தெண்கடல், முழங்கு திரை முழவின் பாணியிற் பைபயப், பழம்புண் ணுறுநரிற் பரவையினாலும்” (நற். 378) எனக் கடலலையின் ஒலிக்கு முழவின் ஒலியை உவமங் கூறிய சிறப்பால் இவர் பெயர்க்குமுன் ‘பேரி’ என்னும் அடை கொடுக்கப்பட்டது போலும். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனென்பான். அவனை நோக்கி, ‘நீயும் நின்புதல்வரும் நீடுவாழ்க’ என்று கூறும்பகுதி மிக்க நயமுடையது. இவர் பாடல்கள் ஏனைத்தொகைகளிலும் காணப்படுகின்றன; அகநா. குறுந். நற்.