/ Tamil Pulvarkal / பேரெயின் …

பேரெயின் முறுவலார்

    • முறுவலாரென்பது இவரது இயற்பெயர்; பேரெயில் - சோழநாட்டிற் காவிரியின் தென்பாலுள்ள தேவாரம் பெற்ற ஒரு சிவஸ்தலம்; இவருக்கு இப்பெயர் ஊராலும் உறுப்பாலும் வந்த பெயர் போலும். அன்றிப் பெரிய மும்மதில்களைத் தமது முறுவலாலெரித்த பரமசிவனுடைய திருநாமம் இவருக்கு இடப்பட்டதென்று கொள்ளினும் பொருந்தும்; முறுவல் - புன்னகை. நம்பி நெடுஞ்செழிய னென்பான், இம்மையில் தானடைதற்குரிய இன்பங்களை யெல்லாம் அடைந்தானென்றும் செய்யவேண்டிய நற்காரியங்களை யெல்லாம் வழுவின்றிச் செய்தானென்றும் இவர் அவனைப் பாராட்டியிருக்கும் பகுதிகள் அறியற்பாலன. இவர் செய்யுள் குறுந்தொகையிலும் உண்டு,