/ Tamil Pulvarkal / கயமனார்

கயமனார்

  • உப்பங்கழியில் மலர்ந்த கருநெய்தற்பூ நீர் பெருகுந் தோறும் கயத்தில் முழுகும் மகளிருடைய கண்களை ஒத்துத்தோன்றுமென்று, “யாயாகியளே” (குறுந். 9) என்னுஞ் செய்யுளில் இவர் மொழிந்திருத்தலின், இவருக்கு இப்பெயர் அமைக்கப்பெற்றது போலும்; கயம் - நீர்நிறைந்த பள்ளம். இந்நூலுள் போரில் இறந்த மகனுடைய பிரிவாற்றாது வருந்தும் நற்றாயின் இயல்பைப் புலப்படுத்தி, “என் மகன், வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும், ஆனாது புகழு மன்னை, யாங்காகுவள்கொ லளிய டானே” (254) எனக் கண்டோர் கூறியதாக இவர் பாடியிருக்கும் நயம் படிப்பவர் மனத்தைக் கனிவிக்கும்; வேறு தொகை நுால்களிலும் (அகநா. குறுந். நற்.) இவருடைய பாடல்கள் பல காணப்படுகின்றன.