/ Tamil Pulvarkal / குன்றூர்கிழார் …

குன்றூர்கிழார் மகனார்

    • இவர் வேளாளர்; நீர் நிறைந்த வயல்களின் இடையேயுள்ள ஓரூரின் மதிலுக்குக் கடலின் இடையேயுள்ள புறமுலர்ந்த கப்பலை உவமை கூறியிருக்கின்றனர். இவராற் பாடப்பட்டோன் போந்தையென்னும் நகரின் தலைவனான நெடுவேளாதனென்பான்.

மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார்

  • அளக்கர்ஞாழ லென்பது ஓரூர். மள்ளர் என்பது வீரரைக் குறிக்கும் சொல். பாண்டிய அரசரால் முதலில் இவர் பாதுகாக்கப்பெற்றவர்; சுக்கிரன் வானத்தில் தென்பாற் காணப்படின் மழை குறையுமென்று இவரறிந்திருந்தவர்; 388 : 1-2. 15-6. இவராற் பாடப்பட்டோன் சிறுகுடிகிழான் பண்ணனென்பவன். ஏனைத்தொகைகளிலும் (அகநா. குறுந். நற்.) இவருடைய பாடல்கள் காணப்படுகின்றன. இப்பெயர் ‘அளக்கர் ஞாழார்’ என்று பிரதிகளிற் காணப்படினும் அது பிழையென்று தோற்றுகின்றது.