/ Tamil Pulvarkal / கணியன்பூங்குன்ற …

கணியன்பூங்குன்றன்

  • கணியன் - சோதிடம்வல்லோன் : “விளை வெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி” (பு. வெ. 174) : பூங்குன்றமென்பது நாடொன்றின் தலைநகர் (நாலடி. 128, 212) 1இராமநாதபுரம் ஜில்லாவில் மகிபாலன்பட்டிக்கு அருகிலுள்ள சாஸனங்களில் அவ்வூர் பூங்குன்றநாட்டுப் பூங்குன்றமெனக் குறிக்கப்பட்டுள்ளது; அதனால் அவ்வூரே இப்புலவருக்குரிய ஊரென்று கொள்ளலாகும். இவருக்கு இப்பெயர் தொழிலாலும் இடத்தாலும் வந்ததுபோலும். இப்பெயர் கணிபுன்குன்றனாரெனவும் வழங்கும். இவராற் பாடப்பெற்றதும் அரிய பொருள்களமைந்ததுமான ‘யாதுமூரே’ (புறநா. 192) என்னுஞ் செய்யுள் படிக்குந்தோறும் நினைக்குந்தோறும் எவருக்கும் மிக்க இன்பத்தை விளைவிக்கும். நற்றிணையிலும் இவரியற்றிய பாடலொன்று உண்டு.