/ Tamil Pulvarkal / பெருங்தலைச்சாத் …

பெருங்தலைச்சாத்தனார்

  • சாத்தனாரென்பது தெய்வத்தான் வந்த இவரது இயற்பெயர்; குமணனது தலையை இவர் பாதுகாத்தது பற்றியோ உறுப்புப் பற்றியோ இப்பெயர் முன் இவ்வடைமொழி சார்த் தப்பெற்றதுபோலும். ஆவூர் மூலங்கிழாரென்பவருடைய புதல்வர் இவர் (அகநா. 224) ; நள்ளியின் தம்பியாகிய இளங்கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் சேர்ந்திருந்தபொழுது சென்று இளவிச்சிக்கோவை மதியாமல் இளங்கண்டீரக்கோவைமட்டுந் தழுவி, அதற்குப் காரணமுங் கூறினர்; 151. தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு தம்முடைய வறுமைத்துன்பத்தைக் கூறித் தன் தலையைத் துணித்தற்கு அவன் வாள்கொடுப்ப அதனைக் கொண்டுசென்று இளங்குமணனுக்குக் காட்டி அவன் மனத்திலிருந்த மாறுபாட்டைப் போக்கினர்; 164-5. இவராற் பாடப்பட்டோரும் இவர் காலத்தவரும் இளங்கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ, குமணன், இளங்குமணன், கடிய நெடுவேட்டுவன், மூவனென்பார்: இவர் பாடல்கள் அகநானூற்றிலும், நற்றிணையிலும், திருவள்ளுவமாலையிலும், யாப்பருங்கலவிருத்தியுரையிலும் காணப்படுகின்றன.