/ Tamil Pulvarkal / கோடைபாடிய …

கோடைபாடிய பெரும்பூதனார்

    • பெரும்பூதனாரென்பது இவரது இயற்பெயர்; கோடைமலையையோ கோடைக்காலத்தையோ நன்குபாடிய இவருடைய ஆற்றலுடைமையைக் கண்டு, ‘கோடைபாடிய என்னும் அடைமொழியை இவர்பெயர்க்கு முன்பு ஆன்றோர் அமைத்தனர் போலும்; “முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத், தாவுபு தெறிக்குமான்” (259) என்னும் இவர் பாடலானது முருகக் கடவுளின் ஆவேசங் கொண்டு மகளிர் ஆடும் வழக்கம் பண்டைக் காலத்தில் உண்டென்பதைத் தெரிவிக்கின்றது.