/ Tamil Pulvarkal / குடவாயிற் …

குடவாயிற் கீரத்தனார்

    • குடவாயிலென்பது சோழநாட்டிலுள்ளதும் சோழர்களின் தலைநகராகவிருந்ததும் தேவாரம் பெற்ற சிவஸ்தலமுமான ஓரூர்; “தண்குட வாயி லன்னோள்”, “கொற்றச் சோழர் குடந்தை வைத்த, நாடுதரு நிதியினுஞ் செறிய, வருங்கடிப் படுக்குவள்” (அகநா. 44, 60) , “தேர்வண் சோழர் குடந்தை வாயில்” (நற். 379) என்பவற்றால் அவ்வூரின் பெருமையை இவர் புலப்படுத்தியிருக்கின்றனர்; புலவர்கள் தம்மூர்ப்பெயர் முதலியவற்றை ஒருவகையாகத் தம்முடைய பாடல்களில் தெரிவித்தல் மரபு; ஒல்லையூர்கிழான்மகன் பெருஞ்சாத்தன் இறந்த பின்பு அவனுடைய வண்மையைப் பாராட்டியும் இரவலர் வருந்துதலை ஒருவகையாகப் புலப்படுத்தியும் இவர் பாடிய செய்யுள் படிப்பவர் உள்ளத்தை உருகச் செய்யும்; இன்னும் சேரனுடைய தொண்டி, பாண்டியரின் கூடல்நகர், கொற்கைத்துறை, சோழரின் உறையூரென்பவை இவர் பாடலிற் பாராட்டப் பெற்றிருத்தலின், மேற்கூறிய பெருஞ்சாத்தனையன்றிச் சேரர் முதலிய முடிமன்னர் மூவராலும் நன்னனாலும் இவர் ஆதரிக்கப் பெற்றவரென்று தெரிகின்றது; பெரும்பாலும் இவர் பாடல்களில் வந்துள்ளது பாலைத்திணை; இவரியற்றிய பாடல்கள்-18: அகநா. 10; குறுந். 3; நற். 4; புறநா. 1.