/ Tamil Pulvarkal / பரும்பதுமனார்

பரும்பதுமனார்

  • உயர்ந்த கருத்தமைந்த செய்யுள் செய்தலின் வல்லவர்: ஆரியக்கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடுவதும் அப்பொழுது பறை கொட்டுவதும் இவராற் கூறப்பட்டுள்ளன. “ஆலமரத்தின் பழங்களை நேற்று உண்டேமென்று நினையாமல் மீட்டும் அம்மரத்தின்பாற் செல்லுதலைத் தவிரா, புள்ளினங்கள்; இரவலரும் அத்தன்மையரே; தம்மை ஆதரிப்போர் செல்வமே இவர் செல்வம்; அவர் வறுமையே இவர் வறுமை” என்பது இவர் பாடலின் (199) பொருள். குறுந்தொகையிலும் நற்றிணையிலும் இவர் பாடல்கள் உள்ளன.