/ Tamil Pulvarkal / காரிகிழார்

காரிகிழார்

  • இவர் வேளாளர்; இவருக்கு இப்பெயர் ஊரான் வந்தது; காரி யென்பது தொண்டை நாட்டிலுள்ளதோரூர் ; இப்பொழுது இராமகிரி யென்று வழங்கப்படுகின்றது; “பணியிய ரத்தைநின் குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” என்று அரசனை நோக்கிக் கூறியதனால், இவர் பரமசிவனை வழிபடுபவரென்று தெரிகின்றது; இவருடைய செவியறிவுறூஉவை உற்று நோக்குகையில் வைதிக வொழுக்கிற் சிறந்தவராகக் கருதப்படுகின்றனர்; இவருடைய சிவநேயத்தையும் பெயரையும் பார்க்கும் பொழுது, பெரியபுராணத்துக் கூறப்படும் காரிநாயனார், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் 52-ஆம் திருவிளையாடலில் வந்துள்ள காரியாரென்பவர்களுடைய ஞாபகம் வருகின்றது. இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.