/ Tamil Pulvarkal / நன்னன்

நன்னன்

  • இவன் விச்சிக்கோவின் பரம்பரையில் முன்னுள்ளோன்; பல்குன்றக்கோட்டமுடையவன். இவன் மகன் நன்னன்மீது (மலைபடு. 64) இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் மலைபடுகடாம் பாடினர். “சூழி யானைச் சுடர்ப்பூ ணன்னன், பாழியன்ன”, “நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூரன்ன”. (அகநா. 15 : 10 - 1, 97 : 12 - 3) எனக் கூறியிருத்தலாற் புகழுடையவனென்று இவன் நினைக்கப்படுகின்றான். இவனைப் பாராட்டிய புலவர் பெருந்தலைச்சாத்தனார்.