/ Tamil Pulvarkal / ஆய்

ஆய்

  • இருவகைவேளாளரில் இவன் உழுவித்துண்போர் வகையினன்; அரசராற் கொடுக்கப்படும் வேளென்னும் உரிமையடைந்தோன்; கடையெழு வள்ளல்களில் ஒருவன்; சிறந்த வீரன்; பொதியின் மலைத்தலைவன்; அதனருகேயுள்ள ஆய்குடி என்பது இவனுடைய ஊர்; ஆய் அண்டிரனென்றும், அண்டிரனென்றும் இவன் பெயர் வழங்கும்; பாணர்க்கும் இரவலர்க்கும் யானைகளையும் பிறவற்றையும் மிகுதியாகக் கொடுத்தோன்; சுரபுன்னைப்பூ மாலையை உடையவன்; கொங்கு நாட்டாரோடு போர்செய்து
  • அவர்களைப் புறங்காட்டியோடச் செய்தோன்; யாதொரு பயனையுங் கருதாது இரவலர்க்குக் கொடுத்து மகிழ்வித்தலையே கடனாகவுடையோன்; இவனுடைய நற்குண நற்செய்கைகள் யாவும் மனமுருகப் புலவர்கள் இவனைப் பாடிய பாட்டுகளால் (127 - 36, 240 - 41. 375 - 5) நன்கு புலப்படும்; இன்னும,் பாம்பு பெற்றுக்கொடுத்த நீலஉடையினை ஆலின் கீழெழுந்தருளிய தலைவனுக்கு (பரமசிவனுக்கு) இவன் கொடுத்தனன்; இதனை, “நீல நாக நல்கிய கலிங்கம், ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த, சாவந்தாங்கிய சாந்துபுலர் திணிதோள், ஆர்வ நன்மொழி யாயும்” (96 - 9) என்னும் சிறுபாணாற்றுப்படையால் உணர்க. இவனைப் பாடிய புலவர்கள்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார். இவர்களுள் இவன் இறந்தபின்பும் இருந்தோர்: துறையூர் ஓடைகிழாரொழிந்த மற்றையோர்.