/ Tamil Pulvarkal / எருக்காட்டூர்த் …

எருக்காட்டூர்த் தாயங்கண்ணணார்

    • எருக்காட்டூரென்பது திரு வாரூர்க்குத் தென்மேற்கில் மூன்றுநாழிகைவழித்துாரத்தில் உள்ள தென்பர்; கண்ணனென்பது க்ருஷ்ணனென்னும் தெய்வப்பெயரின் சிதைவுபோலும்; ‘கண்ணனென்பது கரியோனென்னும் பொருளதோர் பாகதச் சிதைவு’ (திருக்கோவையார், 53, பேர்.) என்பது ஈண்டறியற் பாலது; “செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழி லந்தண ரறம்புரிந் தெடுத்த, தீயொடு விளங்கு நாடன்” (397) என அந்தணரின் வேள்வித்தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்; அக்காலத்திருந்த அரசரால் இவருக்கு இவ்வூர் பிரமதாயமாகக் கிடைத்ததென்று தெரிகிறது; தாயம் - உரிமை. இவராற் பாடப்பட்டோன் சோழன்குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவன்; இவர்காலத்துப் புலவர்கள் அவனைப் பாடிய ஆலத்துார்கிழார் முதலியோர்; தாயங்கண்ணாரென்று ஒரு புலவர் பெயர் தொகை நூல்களிற் காணப்படுகின்றது; அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. இந்நூலிலன்றி, இவர் செய்தனவாக அகநானூற்றில் 7 செய்யுட்கள் உண்டு.