/ Tamil Pulvarkal / குறமகள் …

குறமகள் இளவெயினி

    • இவருக்கு இப்பெயர் சாதியால் வந்தது; குறவர் தலைமகனாகிய ஏறைக்கோனை, “எம்மோன்” (157) என்று இவர் சொல்லியிருத்தலும் இதனை வலியுறுத்தும்; “தமர்தற் றப்பி னதுநோன் றல்லும், பிறர்கை யறவு தானா ணுதலும், படைப்பழி தாரா மைந்தினனாகலும் வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும்,…….ஏறைக்குத் தகுமே” என அச்செய்யுளில் இவர் விதந்திருக்கும் அவனுடைய அருமைக் குணங்கள் அறிதற்பாலன.

பேய்மகள் இளவெயினி

  • பேய்மகள் - தேவராட்டி; பூசாரிச்சி; பேயினது ஆவேசமுற்றவள். இந்த வகையார் இக்காலத்தும் அங்கங்கே உள்ளார். இப்பாட்டின் விசேடவுரையால், பேயே ஒரு மகள் வடிவங்கொண்டு பாடினாளென்று இந்நூலின் பழைய உரையாசிரியர் கருதியதாகத் தெரிகிறது. எயினி - எயினக்குலத்திற் பிறந்த மங்கை, வஞ்சி நகரின் வளமும் தலைவன் கொடையும் இவர் பாடலிற் கூறப்றெ்றுள்ளன. இவராற் பாடப்பெற்றோன் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ.