/ Tamil Pulvarkal / ஓரம்போகியார்

ஓரம்போகியார்

  • இப்பெயர் ஓரம்போதியாரென்றும், ஓரேர் போகியாரென்றும் சில பிரதிகளில் உள்ளது. இவர் ஐங்குறுநூற்றில் மருதத்தைப் பொருளாகவுடைய முதலாம் நூறு இயற்றிய ஆசிரியர்; மருதத்திணையில் மிகப் பயின்றவர்; தமிழ்நாட்டரசர் மூவராலும் பிற உபகாரிகளாலும் நன்கு மதிக்கப்பெற்றவர்; இவைகள் இவரியற்றிய
  • செய்யுட்களால் புலனாகின்றன. எட்டுத்தொகையில் ஐங்குறுநூற்றின் முதல் நூறுபாடலை யன்றி இவர் இயற்றினவாக 8 - செய்யுட்கள் தெரிகின்றன : நற். 2; குறுந். 4; அகநா. 1; புறநா. 1. இவருடைய செய்யுட்களில் 106 மருதத்திணையின் வளத்தையே புலப்படுத்துவன. இவராற் பாடப்பட்டோர் சேரமான் ஆதனெழினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் என்னும் இவர்கள். இவர் பாடலில் வந்துள்ள ஊர்கள்: ஆமூர், இருப்பை, கழார், தேனூர் என்பன: நதிகள்: காவிரி, வையை யென்பன; விழவு : இந்திரவிழவு; விரதம் : தைந்நீராடல்.