/ Tamil Pulvarkal / பாரிமகளிர்

பாரிமகளிர்

  • இவர்கள் பாரியென்னும் வள்ளலுடைய மகளிர்; இவர்களுள் ஒருத்தி, மழையில்லாத வறட்காலத்தில் இரந்துவந்த ஒரு பாணனை உண்பித்தற்குச் சோறுபெறாமையாற் பொன்னை உலையிற் பெய்து சோறாக்கிக் கொடுத்தாளென்று, “மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்துப், பாரி மடமகள் பாண்மகற்கு-நீருலையுட்., பொன்றந்து கொண்டு புகாவாக நல்கினாள், ஒன்றுறா முன்றிலோ வில்” (பழமொழி, 171) என்னும் வெண்பாவால் விளங்குகின்றது. இவர்கள் தம் தந்தை இறந்தபின்பு அவன் பிரிவாற்றாது வருந்திப் புலம்பிப்பாடினர்; அப்பாடல்கள் படிப்பவர் மனத்தைக் கலங்கச் செய்யும். பின்பு, தமது தந்தையின் தோழராகிய கபிலரால் பார்ப் பார்க்கு மணஞ்செய்து கொடுக்கப்பட்டார்கள்.

  • இவர்கள் கபிலராற் பாடப்பட்டவர்கள்.

பாரிமகளிர்

  • இவர்கள் கபிலராற் பாடப்பட்டவர்கள்.