/ Tamil Pulvarkal / வேள் எவ்வி

வேள் எவ்வி

  • இவன், 1வேளாளருள் உழுவித்துண்போர் வகையினன்; மிழலைக் கூற்றத்துத் தலைவன்; மிகுந்த கொடையாளி; தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டோன். “ஓம்பா வீகை மாவே ளெவ்வி”, “எவ்விதொல்குடி”, “போரடுதானை எவ்வி” என இந்நூலிலும், “எவ்வி யிழந்த வறுமை யாழ்ப் பாணர், பூவில் வறுந்தலை போல” (19) எனக் குறுந்தொகையிலும் சான்றோர் இவனைப் புகழ்ந்து கூறியிருத்தல் காண்க. கடற்கரைக்கணுள்ள நீழலென்னுமூர் இவனுடையது; அகநா. 366. இவனைப் பாடியவர்கள்: மாங்குடிகிழார், கபிலர், வெள்ளெருக்கிலையார். இவருள், இவன் இறந்த பின் வருந்திப் புலம்பியவர், வெள்ளெருக்கிலையார்.