/ Tamil Pulvarkal / அரிசில்கிழார்

அரிசில்கிழார்

  • கொள்ளிடத்தின் வடபால் அரியிலூர் அல்லது அரியில் என்று வழங்கும் ஓரூரின் பெயர் அரிசில் என்பதன் மரூஉவாகக் கருதப்படுகின்றது; சகர யகரங்கள் தம்முள் மயங்குதல் இயல்பு. “அரிசிற்கரை” என்று மைஸுர் ஸமஸ்தானத்தில் ஓர் ஊர் உள்ளது. கிழார் - உரியவர். கிழாரென்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப்பெயராக இருந்ததென்று தெரிதலின், இவர் வேளாண் மரபினராக இருத்தல் கூடும். இஃது, “ஊரும் பேரும்” (தொல். மரபு. 74) என்னும் சூத்திரத்தின் உரையிற் காட்டிய பெயர்களாலும், திருத்தொண்டர்புராண வரலாற்றின் 2-ஆம் செய்யுளில் எடுத்துக்காட்டிய பெயர்களாலும் அறியலாகும். கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய பேகனைப் பாடியிருத்தலின் இவர் அவன் காலத்தினராக நினைக்கப்படுகின்றார்; அவனால் துறக்கப்பட்ட கண்ணகி யென்பவளை அவனோடு சேர்த்தல்வேண்டி அவனைப் பாடினர்; இந்தக் கண்ணகி சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட கண்ணகியல்லள். அதியமான் தகடூர்பொருது வீழ்ந்த எழினியின் பிரிவாற்றாது வருந்தி இவர் புலம்பினர்; பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்தைப் பாடித் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையிடம் ஒன்பது நூறாயிரங் காணம் பரிசில்பெற்று அவன்பால் அமைச்சுத்தொழில் பூண்டு விளங்கியவர். தகடூர்யாத்திரை என்னும் நூலில் இவராற் பாடப்பட்ட பாடல்களும் சில உள்ளனவென்பது தொல்காப்பியப் புறத்திணையியலில் 8, 12-ஆம் சூத்திரமுதலியவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் விளங்குகின்றது. திருவள்ளுவ மாலையிலுள்ள, “பரந்த பொருளெல்லாம்” என்னும் 13-ஆம் செய்யுள் இவரியற்றியதாகக் கூறப்பட்டிருத்தலின், திருவள்ளுவர் காலத்தினராகிய கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராக
  • இவரைச் சொல்லுவதற்கு இடமுண்டு. இவர் பெயர் அரியில்கிழாரென்றும் வழங்கும். இந்நூலுள் இவராற் பாடப்பெற்ற குதிரைமறம், தானைமறம், பேய்க்காஞ்சி, மகட்பாற்காஞ்சி என்னுந் துறைகள் அறிந்து இன்புறற்பாலன. பதிற்றுப்பத்து, 8-ஆம் பத்தின் இறுதியில் அமைந்திருக்கும் “பாடிப்பெற்ற பரிசில் : தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தொடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்க வென்று அமைச்சுப்பூண்டார்” என்னும் வாக்கியத்தால் இவருடைய குணவிசேடங்களும் மேம்பாடும் விளங்கும் (கோயிலாள் - பட்டத்தேவி; காணம் - ஒருவகைப் பொற்காசு; அரசுகட்டில் - சிங்காதனம்; அமைச்சு - மந்திரி வேலை) . மேற்கூறிய சேரவரசனும் உக்கிரப்பெருவழுதியும் பேகனென்னும் வள்ளலும் அதியமான் தகடூர் பொருதுவீழ்ந்த எழினியும் இவர் காலத்தவர். இவருடனிருந்த புலவர் : கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார், பொன்முடியார் முதலியோர். எட்டுத்தொகையில் இவர் இயற்றியுள்ள செய்யுட்கள் 18 (பதிற்றுப்பத்து - 10, புறநானூறு - 7, குறுந்தொகை - 1) 146, 230, 281, 285, 300, 304, 342. அள்ளூர் நன்முல்லையார்
  • அள்ளுரென்பது பாண்டிநாட்டில் சிவ கங்கைக் கண்ணதோர் ஊர்; இது, “கொற்றச் செழியன், பிண்டநெல்லினள்ளூ ரன்னவென், ஒண்டொடி” (அகநா. 46) என்னும் இவர் பாடலால் விளங்குகின்றது; “கிள்ளை” வளைவாய்க் கொண்ட வேப்பவொண் பழம், புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப், பொலங்கல வொருகா சேய்க்கும்” என்னும் உவமையும், “அரும்பனி யச்சிரந் தீர்க்கும், மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே”, “அவர் நமக், கன்னையு மத்தனு மல்லரோ” (குறுந். 67, 68, 93) என்பனவும் இவருடைய நுண்மாண்புலமை முதலியவற்றைத் தெரிவியாநிற்கும்; இவர் பெயர் அள்ளூர் நன்முல்லையெனவும் வழங்கும். எட்டுத்தொகையில் இவரியற்றிய வேறு செய்யுட்கள் (அகநா. 1. புறநா. 1. குறுந்தொகை, 9, 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237) ஆடுதுறை மாசாத்தனார்
  • காவிரி நதியின் தென்பாலொன்றும் வடபாலொன்றும் வடவெள்ளாற்றங்கரையிலொன்றுமாக மூன்று ஊர்கள் ஆடுதுறையென்னும் பெயரினவாக உள்ளன. இவற்றுள் முன்னுள்ள இரண்டும் தேவாரம் பெற்றனவும் பின்னது புராண வரலாறுள்ளதுமான சிவஸ்தலங்கள்; இவை முறையே தென்குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை, ஆடுதுறையென வழங்கும்; பின்னுள்ளது ஏழு துறைகளுள் ஒன்று. தெய்வப்பெயரை மக்கட்கிட்டு வழங்குதல் மரபாதலின் ஐயனாருடைய திருநாமமாகிய மாசாத்தனாரென்பது இவருக்குப் பெயராக அமைந்தது போலும்; சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவராதலால், இவர் சோழநாட்டினரென்றே கொள்வது தக்கது. அவன் இறந்தபொழுது பிரிவாற்றாமல் வருந்திப் பாடியிருத்தலால் அவன் இறந்தபின்னும் இவர்
  • இருந்தாரென்பதும், அவனைப்பாடிய ஆலத்தூர்கிழார் முதலிய புலவர் ஒன்பதின்மரும் இவர் காலத்தினரென்பதும் தெரிகின்றன; “பகைவர்களையும் அவர்கள் சேனைகளையும் கொன்று உன்பசியை எளிதில் ஒழிக்கும் இந்த வளவனைக் கைக்கொண்டாயே! இனி உன் பசியைத் தீர்க்கும் ஆற்றலுடையார் யாவர்? உனக்கே நீ தீங்கை விளைவித்துக் கொண்டமையின் நீ மிக்க பேதைமையையுடையாய்!” (புறநா. 227) என்று கூற்றத்தை நோக்கி இவர் கூறின செய்யுள் பாராட்டற்பாலது.