/ Tamil Pulvarkal
/ அண்டர்மகன் …
அண்டர்மகன் குறுவழுதி
- தொகைநூல்களில் குறுவழுதியாரென்று ஒரு பெயர் காணப்படுகின்றது. இவ்விருபெயரினரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. வழுதி என்ற பெயரால் இவர் பாண்டிய மரபினர் என்பது போதரும். அண்டர்மகன் குறுவழுதி இயற்றியனவாகப் புறச் செய்யுள் ஒன்றும், குறுந்தொகைச் செய்யுளொன்றும், குறுவழுதி யென்பார் அகநானூற்றில், 150, 228-ஆம் செய்யுட்கள் இயற்றியனவாகவும் உள்ளன. இவராற் பாடப்பட்டவர் பெயர் முதலியன விளங்கவில்லை. இவர் வாக்கில் வந்துள்ள “கல்வி யென்னும் வல்லாண் சிறாஅன்” (புறநா. 346) என்பது பாராட்டற்பாலது.