/ Tamil Pulvarkal
/ ஆலங்குடி …
ஆலங்குடி வங்கனார்
- ஆலங்குடி யென்னும் பெயருள்ள ஊர்கள் பல இருத்தலின் இவர் ஊர் இன்னதென்று நிச்சயிக்கக்கூட வில்லை. தொகைநூல்களில் ஏழு பாடல்களும், திருவள்ளுவமாலையில் ஒரு செய்யுளும் இவர் செய்தனவாக இப்பொழுது காணப்படுகின்றன. காமக்கிழத்தியர் தலைவனை ஆடிப்பாவை போன்றான் என்று இகழ்தலும் (குறுந். 8) உயர்குடிப் பிறந்த கற்புடைமகளிர் தம்தலைவர் கொடுமைபுரியினும் அதனைமறந்து அன்புபாராட்டுதலும் (குறுந். 45) கூறும் முகத்தால் இவர் இருவேறு மகளிருக்கும் உள்ள வேற்றுமையை நன்கு புலப்படுத்துகின்றார். இவர் பாடிய நற். 330-ஆம் பாடலும் இவ்வேற்றுமையையே காட்டும்.