/ Tamil Pulvarkal / ஆலத்தூர்கிழார்

ஆலத்தூர்கிழார்

  • ஆலத்தூரிற் பிறந்தவர் இவர். ஆலத்துார் என்ற பெயருள்ள ஊர்கள் தமிழ் நாட்டிற் பல உள்ளன. இதனை இன்ன ஆலுத்தூரென்று சொல்லமுடியவில்லை. நன்றியறிவும், அரசர்களை இடித்துக்கூறும் மனவலியும் குறிப்பறிந்தளிக்கும் உபகாரிகளின் இயல்பை வெளிப்படுத்தும் அன்புடைமையும், போர்செய்யும் முறைமையை விளக்கும் இயல்பும், பொருள்களின் இயற்கைநலனைப் புலப்படுத்தும் நுண்ணறிவும் உடையவர் இவர். “நெடுங்காற் கணந்துளாளறி வுறீஇ, யாறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்” (குறுந். 350) எனக் கணந்துட் பறவையின் தன்மையை இவர் தெரிவிக்கின்றார். இவர் செய்தனவாகத் தொகைநுால்களில் 7 செய்யுட்கள் (புறநா. 5, குறுந். 2) காணப்படுகின்றன. இவராற் பாடப்பட்போர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சியகிள்ளிவளவனும், சோழன் நலங்கிள்ளியுமாவர்.