/ Tamil Pulvarkal
/ ஆலியார்
ஆலியார்
- ஆலி என்பது சோழநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய ஆலிநாடென்பதன் தலைநகர். இது திருமங்கையாழ்வார் அவதரித்த தலமென்பர். இவ்வூரினராதலால் இவர் இப்பெயர்பெற்றார் போலும்; இவ்வூர்ப்பெயர் திருவாலியென வழங்காநிற்கும். தன்னுடைய தலைவன் தனக்குச் சிறந்த உணவை யளிக்கின்றானேயன்றி, போர் செய்தற்குத் தன்னை முந்திச்செல்லென்று ஏவுகின்றானல்லனென்று ஒருவீரன் சொல்லியதாக இவர் இயற்றிய பாடலின் (புறநா. 298) பொருள் வீரச்சுவையைப் புலப்படுத்துகிறது. இதனால் இவர் வீரர்குடியிற் பிறந்தவராகவும் கருதப்படுகிறார்; இப்பெயர் சில பிரதிகளில் ஆவியாரென்றும், ஆனீயாரென்றும் காணப்படுகிறது.