/ Tamil Pulvarkal / இருங்கோவேள்

இருங்கோவேள்

  • இவன் கொடையாளிகளுள் ஒருவன்; வடபக்கத்தில் ஒரு முனிவருடைய ஓமகுண்டத்திலே தோன்றித் துவராபதியை (துவாரசமுத்திரத்தை) ஆண்டு நாற்பத்தொன்பது தலைமுறை தொன்று தொட்டுவந்த வேளிர்களுள் ஒருவன்; ஒரு பெரியோர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவருக்கு இடையூறு செய்யவந்த புலியொன்றை அவர் கட்டளையின்படி கொன்றமையால் இவனுக்குப் புலிகடிமாலென்று ஒரு பெயர் உண்டாயிற்றென்பர்; இவற்றை, “நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச், செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை, உவரா வீகைத் துவரை யாண்டு, நாற்பத் தொன்பது வழிமுறை வந்த, வேளிருள் வேளே”, “ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்” என்பவற்றாலுணர்க. வேள்பாரி இறந்த பின்பு அவன் புதல்வியரை அழைத்து வந்து மணஞ்செய்து கொள்ளும்படி கபிலர் புகழ்ந்துவேண்ட, அதற்கு உடம்படாது மறுத்தமையால் இவன் அவரால் வெறுக்கப்பட்டான்.