/ Tamil Pulvarkal / இரும்பிடர்த்தலை …

இரும்பிடர்த்தலையார்

  • இவர் சோழன்கரிகாலனுடைய அம்மான்; அவனுக்குப் பெருந்துணையாயிருந்தவர்; “சுடப்பட்டுயிருய்ந்த சோழன் மகனும், பிடர்த்தலைப் பேரானைப் பெற்றே - கடைக்காற், செயிரறு செங்கோல் செலீஇயினான்” என்னும் பழமொழி வெண்பா வாலும் அதன் பழைய உரையாலும் உணர்க. யானைப்பிடரை இரும்பிடர்த்தலை யென்று சிறப்பித்தமைபற்றி இவர் இப்பெயர்பெற்றார் போலும் (புறநா. 3 : 11) . இவருடைய இயற்பெயர் விளங்கவில்லை. தலைவன், இரவலருடைய குறிப்பறிந்து கொடுக்கும் வண்மைநலம் முதலியன இவராற் பாராட்டப் பெற்றுள்ளன; இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி.