/ Tamil Pulvarkal / உறையூர் …

உறையூர் முதுகூத்தனார்

  • இப்பெயர் முதுகூற்றனாரெனவும் சில பிரதிகளிற் காணப்படுகின்றது; “வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர், இன்கடுங் கள்ளி னுறந்தை” (அகநா. 137) என இவரே கூறியிருத்தலால் தம்முடைய ஊரில் இவர் அன்புடையரென்பதும், அவ்வூர் அரசராகிய சோழரால் நன்கு மதிக்கப்பெற்றவரென்பதும் வெளியாகின்றன; “உள்ளது, தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள், நீணெடும் பந்த ரூண்முறையூட்டும், இற்பொலி மகடூஉ” (331) எனக் கற்புடை மங்கையினியல்பையும், “தேவிற் சிறந்த திருவள் ளுவர்குறள்வெண்பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார் - நாவிற், குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ், செயலில்லை யென்னுந் திரு” (திருவள். 39) எனத் திருக்குறளின் சிறப்பையும் பாராட்டியிருத்தல் மதிக்கற் பாலது; இவர் வாக்கிற் பெரும்பாலுங் காணப்படுவது பாலை நிலத்தினியல்பு; இவர் செய்தனவாக 6 பாடல்கள் தெரிகின்றன : அகநா. 2; குறுந். 2; திருவள். 1; புறநா. 1.