/ Tamil Pulvarkal / உலோச்சனார்

உலோச்சனார்

  • இவர் நெய்தற்றிணையையே மிகுதியாகச் சிறப் பித்துள்ளார். இதனாலும் தலைவியின் கூற்றாக, ‘கழிசூழ்படப்பைக் காண்டவாயில்….எம் அழுங்கலூரே’ (நற். 38) என்று கூறுவதனாலும் இவர் நெய்தல் நிலத்தைச்சார்ந்தவர் என்று ஊகிக்கலாம். உலோச்சென்பது சைனர்கள் செய்து கொள்ளும் ஒரு கிரியை. அதனால் இவர் சைனரென்று கொள்ளுதற்கு இடமுண்டு. இவர்வாக்கில் எருமைமற மென்னுந்துறை விளங்கக் கூறப்பெற்றுள்ளது; இவராற் பாடப்பட்டோன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர் பாடிய பாடல்கள் : 35 (அகநா. 8, குறுந். 4, நற். 20, புறநா. 3)