/ Tamil Pulvarkal
/ ஊன்பொதிபசுங்குட …
ஊன்பொதிபசுங்குடையார்
- இவராற் பாடப்பட்டோர் சேரமான் பாமுளூரெறிந்த இளஞ்சேட்சென்னி, சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி, சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி யென்பார்; இவர் அரசர்களுக்குத் தருமங்களைக் கற்பிக்கும் முறை மிக அழகுவாய்ந்தது; இராவணன் உயிரோடிருக்கையில் தம்பால் அடைக்கலம்புகுந்த விபீடணனுக்கு இராமர் இலங்கா ராச்சியமளித்ததை உட்கொண்டு, “ஒன்னார், ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப், பாண்கட னிறுக்கும் வள்ளியோய்” (203) எனக் கூறியிருத்தலையும், மிக்க வறுமையுற்ற கிணிப்பொருநனொருவன் தன் உறவினரோடு சென்றகாலத்தில் ஓருபகாரி அவர்களுடைய நிலைமைக்கு எத்தனையோ மடங்கு மேற்பட்டுள்ளனவாகிய அணிகலங்களைக் கொணர்வித்து அவர்களிடையே சொரிவித்தபொழுது, அவர்கள் அணியும் முறையறியாமல் தடுமாற்ற முற்று விரைந்து சென்று அவற்றை அணிந்து கொண்டதற்கு இராவணன் வௌவிச்சென்ற சீதை தான் சென்றவழியை இராமன் அறிந்துகொள்ளுதற்கு அடையாளமாகத் துகிலால் முடிந்து வீழ்த்திய அணிகலங்களைக் கண்ட வானரங்கள் தனித்தனியே விரைந்தெடுத்து அவற்றை அணிந்துகொள்ளுந் தடுமாற்றத்தை உவமித்திருப்பதையும் (378) நோக்குகையில், இராமசரித்திரம் இவருடைய ஞாபகத்திலிருந்து வந்ததென்பதும், வறுமையின் இயல்பை விளங்கக் கூறுதலில் இவர் வல்லுநரென்பதும் விளங்குகின்றன. இவரியற்றிய செய்யுட்கள் இந்நூலில் நான்கு.