/ Tamil Pulvarkal
/ ஐயூர் …
ஐயூர் மூலங்கிழார்
- இவருக்கு இப்பெயர் மூலமென்னும் நாண்மீனால் வந்ததுபோலும்; இவர்பாடலில் வேங்கைமார்பனென்னும் தலைவனாற் பாதுகாக்கப்பட்டுள்ள காணப்பேரென்னும் ஊரில் அமைந்திருந்த அரணின் அமைதி கூறப்பெற்றுள்ளது; இவராற் பாடப்பட்டோன் கானப்பேரெயில்கடந்த உக்கிரப்பெருவழுதி. இவர்காலத்துப் புலவர் அவ்வழுதியைப் பாடியவர்களாவர்.